திபெத்திய பௌத்த ஆன்மீக தலைவர் தலாய் லாமா ரோஹிங்கயா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்துமாறு மியான்மார் பௌத்த பிக்குகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மேற்கு இந்தியாவின் தர்மசாலாவில் வாழ்ந்து வரும் தலாய் லாமா ABC செய்தி சேவைக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் தீவிரவாத பௌத்த பிக்குகள் மன்னிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற நற்குணங்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இது மிகவும் துக்ககரமானது. எல்லா பிரதான மதங்களும் அன்பு, கருணை மற்றும் மன்னிப்பு என்பவற்றை நமக்கு போதிக்கின்றன. இந்த மதங்களை உண்மையாக பின்பற்றும் ஒருவர் மற்ற மத மக்கள் மீது இவ்வாறான வன்முறை மற்றும் அடக்குமுறை என்பவற்றை பிரயோகிக்க மாட்டார் எனவும் தலாய் லாமா கூறினார்.
.jpg)
Post a Comment