இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாணந்துறையில் அமைந்துள்ள NO LIMIT கட்சியகம் இனந்தெரியாத இனவாதிகளின் பெட்றோல் குண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மேற்படி வர்த்தக நிலையம் இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தீயை அணைப்பதற்காக 4 தீயணைப்புப் படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விறைந்துள்ளன.
அளுத்கமையில் ஆரம்பிக்கப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே பானந்துறை தாக்குதலையும் நோக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கான திட்டத்துடனேயே இனவாதிகள் செயற்பட்டு வருகின்றனர் என்பது தெளிவு.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் இலக்காக தாக்கப்பட்ட பொதும் அரசும் பாதுகாப்புத் துறையும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இது வரை முன்னெடுக்காமை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலாகவே உள்ளது.









Post a Comment