வறிய ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் என்ற சட்டம் அங்கீகரிக்கப் பட்டு அந்நாட்டில் ஓர் பாலுறவு கொள்பவர்கள் பிடிபட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவாகியிருந்தது.
உகண்டா அதிபர் யோவெரி முசெவெனியால் இச்சட்டம் இவ்வருடத் தொடக்கத்திலேயே கையெழுத்து இடப்பட்டிருந்தது.
ஏற்கனவே கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிக்கித் தவிக்கும் உகண்டாவில் ஓரினச் சேர்க்கையும் தடை செய்யப் பட்டதை அடுத்து அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் உகண்டாவின் அரச கல்வி நிலையங்கள் அமெரிக்க நிதியுதவியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உகண்டாவில் ஓரினச் சேர்க்கை தடை செய்யப் பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உகண்டாவில் ஓரினச் சேர்க்கை சட்ட ரீதியாகத் தடை செய்யப் பட்டதால் அந்நாட்டுடனான திட்டமிடப் பட்ட இராணுவப் பயிற்சி நடவடிக்கைகள் யாவும் ரத்து செய்யப் படுகின்றன. மேலும் மோசமான மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் LGBT எனும் பாலியல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து உகண்டா மக்களும் அமெரிக்காவுக்குள் நுழையும் அனுமதியும் மறுக்கப் படும்!' எனப்பட்டுள்ளது. எனினும் உகண்டாவுக்கான மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அமெரிக்கா நிறுத்தாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆரம்பத்தில் உகண்டா அதிபரால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் மரண தண்டனை என்ற தீர்ப்பு மாற்றப் பட்டு குறைந்த பட்சம் 14 ஆண்டு சிறைத் தண்டனை என பெப்ரவரியில் திருத்தப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment