மகிந்தவை அச்சுறுத்தும் ஞானசார! என்னை கைது செய்தால் விளைவு மோசமாகும்


அளுக்கமவில் தனது குழுக்களை ஏவி காடைத்தனத்தை அரங்கேற்றி விட்டு உயிர்களையும் பல கோடிக்கணக்கான சொத்துக்களையும் கொலை செய்தும் எரித்தும் பள்ளிவாசலுக்கு தீமூட்டியும் தனது நீண்டநாள் இனவாத சினத்தை அரங்கேற்றிய பொதுபலசேனா இப்போது தான் அப்பாவி என அதன் தலைவர் ஞானசார சொல்வது எந்த வகையில் நியாயமாகும்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஆட்சிகள் இப்படியான வன்முறைகளால் தான் மாறி இருக்கின்றன.ஒரு நாட்டில் பெரும்பான்மையான மொழியையோ கலாச்சாரத்தையோ பின்பற்றும் ஒரு கூட்டம் நாட்டை ஆள்வது தான் வழமை அதற்கேற்றால் போல் இனவாத முறுகல்கள் கொலை கொள்ளை கற்பழிப்புகள் குறிப்பிட்ட அரசின் கூட்டாளிகளால் நடத்தப்படும்.
இம்முறை இந்த வேலையை கச்சிதமாகவே பொதுபலசேனா தனது எல்லை மீறிய இனவாத விசுவாசத்தை அரசிற்கு அழுத்கம தர்ஹா நகர்பேருவளை போன்ற இடங்களை எரித்ததன் மூலம் காட்டியது.
இப்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கையில் பொதுபலசேனா ஆளும் அரசாங்கத்திற்கு சவால் விடும் அளவுக்கு அதனது இனவாத தீயை நாடு பூராகவும் பரப்பி மகிந்தவிடம் பொதுபலசேனா தலைவர் எனக்குத்தான் இப்பொழுது அதிகாரம் என்னை கைது செய்ய மகிந்தவால் முடியாது நானே அடுத்த ஜனாதிபதி என்று சவால் விட்டிருப்பது எரியும் இனவாதத்திற்கு மீண்டும் மீண்டும் எண்ணெய் ஊற்றுவதாக அமையும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger