முகூர்த்தத்தை ஜனாதிபதி தீர்மானிப்பார்: கெஹலிய…!!

 

ஜனாதிபதிக்கான பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாஸ்திரிகள் பல திகதிகளை குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி அதில் உகந்த திகதியையும் மூகூர்த்தத்தையும் தீர்மானிப்பார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger