தேசிய சுதந்திர முன்னணியின் தலைரும் பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சருமான விமல் வீரவங்சவை கடுவலை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 16 பேரும் ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினரும் வாக்கெடுப்பின் போது அவையில் இருக்கவில்லை.
தலைவர் பதவியிலிருந்து விமல் வீரவங்சவை நீக்கிவிட்டு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நியமிக்குமாறு யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment