சற்றுமுன் திருகோணமலை பஸ்நிலையம் முன்பாக அமைந்துள்ள
முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ஹோட்டல்(சிட்டி ஹோட்டல்) ஒன்றில் பணிபுரியும்
பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஹோட்டல் உரிமையாளர் மடவளை நியூசுக்கு
தெரிவித்தார் .
திருமலை பல்கலைக்கழக பெரும்பான்மை சமூக இளைஞர்கள் சுமார்
பதினைத்து பேர் குறித்த பணியாளரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதுடன் குறித்த
ஹோட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர்.
நேற்று குறித்த வாலிபர்கள் குறித்த ஹோட்டல் ஊழியருடன்
வாய்த்தர்கத்தில் ஈடுபட்டு திரும்பி சென்றதாகவும் இன்று போதையில் இரும்பு
கம்பிகளுடன் வந்து குறித்த ஹோட்டல் பணியாளரை தாக்கிவிட்டு
ஹோட்டலையும் அடித்து நோருக்கியதாக ஹோட்டல் உரிமையாளர் மடவளை நியூசுக்கு
தெரிவித்தார் .
ஹோட்டலின் சகல
கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ள அதேவேளை கதிரைகள்
மேசைகள் உற்பட அப்பம் ,ரொட்டி பார் கேஷியர்
கண்ணாடி மேசைகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது இரண்டு தளங்களை கொண்ட குறித்த
ஹோட்டல் மேல்மாடியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது
தற்போது போலிஸ் உயரதிகாரிகள் ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை
மேற்கொண்டுள்ள அதேவேளை குறித்த வலைபர்களையும் கைது செய்துள்ளனர் பலத்த
காயங்களுக்கு உள்ளான ஹோட்டல் பணியாளர்
மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் .

Post a Comment