ஆக்கில் போக்கில் நாக்கை நீட்டி பேச நமக்கும் தெரியாமல் இல்லை.அதனால் அடங்கினோம் என்று நினைத்தாரோ தெரியவில்லை.பிறை விடயத்தில் அல்லாஹ் அவருடைய கையில் பிறை ஆய்வை கொடுத்ததுபோல கொக்கரிக்கிறார்.
யாரோ ஒரு அரபி சொன்னதை வைத்து இவ்வளவு ஆட்டம் போடும் இவருக்கு நாசா ஆய்வாளர்கள் மத்தியகிழக்கு ஆய்வாளர்கள் சொன்னதை மறுக்க முடியுமா?
ஈக்கில் பெறுமதி இல்லாத ஆக்கில் ஆய்வுகள் முரண்பாட்டின் மொத்த உருவமான ஜம்மிய்யதுள் உலமா சபைக்கு மட்டும்தான் பொருந்தும் .சுனாமி உதவியை சொல்லிக்காட்டி கண்ட பிறையை மறுக்க சொன்ன தலைவர் இவரை போன்றுதானே இருப்பார்.
கட்டுரையின் தலைப்பான முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பாமல் மேலதிக தகவலாக கொடுத்த விடயத்தை பற்றி பேசுகிறாராம்.முரண்பாடுகளுக்கு பதில் சொல்லி அவரின் வேஷம் தெரிய வந்திவிடும் என்ற பயத்தில் அவர் வைத்த மற்ற விடயங்களுக்கு பதில் சொல்லிவிடுவோம் என்ற அச்சம் இருந்ததாலேயே முதல் தகவலுக்கு பதில் தாருங்கள் என்று தைரியமாக கூறியுள்ளார்.
பத்து விடயங்களை சுட்டிக்காட்டி பரவச நிலையில் நின்று பதறுகிறார்.அவர்தான் ஆய்வளராம் நாம் எல்லாம் ஆறாம் வகுப்புக்கும் தகுதி இல்லாதவராம் என்று.யார் ஆய்வாளர் யார் ஆய்வில் தொய்வாளர் என்பதை இக்கட்டுரையை வாசிக்கின்றவர்களுக்கு ஊர்ஜிதமாக தெரியும்.
எனக்கு மறுப்பு எழுத புறப்பட்ட இந்த ஆக்கில் அவர் கட்டுரையை ஒரு இணையதளத்துக்கு அனுப்பும்போது இணைய ஆசிரியரை மிரட்டும் தொனியில் கட்டுரையை பிரசுரிக்குமாறு கேட்டு கொள்கிறார் என்றால் இவர் பிறை ஆய்வை?மக்கள் கேட்கவேண்டும் என்பதற்கு ஆய்வில் எப்படி எல்லாம் தில்லுமுள்ளு செய்திருப்பார் என்ற இவர் பற்றிய மனப்பதிவோடு இனி இவர் வைத்த வறண்ட வாதங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.
ஆகில் வாதம் ஒன்று :
“நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் சஊதியில் உள்ள அறிஞர் ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கவும் இல்லை, அவ்வாறு எந்த ஒரு இடத்திலும் நான் எழுதவும் இல்லை. அவர் தனது கூற்றில் உண்மை உள்ளவராக இருந்தால் நான் அவ்வாறு சொன்னதற்கான ஆதாரத்தைக் கொண்டு வரட்டும். அவர் தான் ஒரு பொய்யர் என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்ளட்டும்.”
எமது பதில்:
பிறை அறிவியல்? ஆய்வில் தனக்கு என்ன தொடர்பு என்பதை ஊர்ஜிதம் செய்ய தான் முஹம்மத் அவ்தா என்ற ஆய்வாளருடன் தொடர்பு வைத்தததாக கூறினார்.இதற்கு மறுப்பு சொன்ன நான் இந்த முஹம்மத் அவ்தா என்ற ஜோர்தான் நாட்டை சேர்ந்தவரை சவூதி அறிஞர் என்ற தோரணையில் சொல்லி விட்டேன்.அது தவறுதான்.இந்த தவறை பிடித்துகொண்டு பின்னங்கால் பிரடியில் அடிக்க கத்துகிறார்.ஆக்கில் எழுதிய நூலில் பத்தாம் பக்கத்தில் பிழை உள்ளது என்று சொன்னால் எங்கே பத்தாம் பக்கத்தில் பிழை விட்டுள்ளேன் 11 ஆம் பக்கத்தில்தானே அந்த பிழை உள்ளது என்று இவர் மடத்தனமாக பேசுவதுபோல் பேசுகிறார்.இங்கு பக்கம் முக்கியமா விட்ட பிழை முக்கியமா என்ற அர்த்தம் புரியாத புலம்பல்களை மறுப்பு என்று எழுதுகிறார்.
இவர் தக்லீத் செய்யும் அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது முக்கியமா குறித்த ஒரு நபருடன் தொடர்பு இருப்பதால் தான் பிறை ஆய்வாளன் என்று பீற்றி கொண்டது பெரிய விடயமா?
எதிர் தரப்பு வைக்கின்ற வாதத்தை என்ன என்று அறியாமல் அவர் வைக்கும் வாதத்தில் எழுத்துப்பிழைகளை வாதமாக்குவதுபோல் இவர் நிலை உள்ளது.
ஆகில் வாதம் இரண்டு:
“ஒவ்வொரு மாதமும் மக்கா நகருக்கான அமாவாசை சூரிய அஸ்த்தமனத்துக்கு முன்னரும், சந்திர அஸ்த்தமனம் சூரிய அஸ்த்தமனத்துக்குப் பின்னரும் ஏற்படும் முதலாவது மாலைப் பொழுதுடன் புதிய மாதம் ஆரம்பிக்கும்” என்பது இந்நாட்காட்டி முறைமையின் விதியாகும். இதனை அஸ்ஹரியால் மறுக்க முடியுமா?”
எமது பதில்:
இந்த வாதத்தை யார் மறுத்தது?சவூதி பற்றி நான் எதற்காக எழுதினேன் என்பதை அறியாமல் மறுப்பு எழுதுகிறார்.
பிறை தொலைக்காட்டிக்கு தென்பட போதுமான அளவு எது என்பது பற்றி அரேபிய வானியல் ஆய்வாளர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்யவே இதை எழுதினேனே தவிர சவுதியில் எவ்வாறு பிறை தீர்மானிகப்படுகிறது என்பது பற்றி நான் எழுதவில்லை.
“தப்பான நாளில் தலைப்பிறையைத் தேடிவிட்டு அது பிறந்திருந்தது, ஆனாலும் தெரியவில்லை என்று எழுதுகின்றார் அஸ்ஹரி.”
அவர்கள் தப்பான நாளில் பிறை பார்க்க சொன்ன விடயம் எமக்கு ஏலவே தெரியும்.அது இங்க வாதப்பொருள் அல்ல.ஒரு பிறை தொலைக்காட்டிக்க்கோ வெற்றுக்கண்ணுக்கோ தென்பட எவ்வளவு பெறுமானம் இருக்க வேண்டும் என்பது பற்றிய தகவலை சொல்லும் ஒரு இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளதே தவிர இங்கு பேசுபொருள் தப்பான நாளில் தலைப்பிறை தேடுவது பற்றி அல்ல.இதுவும் அதில் நான் என்ன வாதம் வைத்தேன் என்பதை அறியாமல் ஆக்கில் கூச்சல் இடுகிறார் என்பதே உண்மை.
ஆகில் வாதம் மூன்று:
“8.07.2013ம் திகதி திங்கட்கிழமை றமழானுக்கான தலைப்பிறை பிறக்கின்றது. என்று எழுதுகின்றார்.
பிறப்பு என்பதும் இறப்பு என்பதும் சடப்பொருட்களுக்கும், சக்திக்கும் உரியதாகும். பிறை என்றொரு சடப்பொருளோ சக்தியோ வானத்தில் இல்லை. அவ்வாறு வானத்தில் பிறை என்றொரு வான் பொருள் இருப்பதாக அஸ்ஹரி அவர்களாள் நிருபிக்க முடியுமா?”
எமது பதில்:
தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறாரே தவிர நாம் என்ன சொல்ல வருகிறோம் எதற்காக அந்த வார்த்தைகளை உபயோகிக்கிறோம் என்பதை அறியாதவராக பேசுகிறார்.
பிறையின் பிறப்பு என்பது என்ன என்பதை வானியல் ஆய்வாளார்கள் நோக்கும் விதம் எதுவோ அதுவே எமது நோக்கமாக இங்கு எழுதப்பட்டது.
பிறை பிறந்தது என்றால் அமாவாசைக்கு சொல்லப்படும் இன்னொரு வார்த்தை பிரயோகமாகும்.பிறை பிறந்தது என்பது பௌர்ணமிக்கு எதிர்ச்சொல்லாகும்.பௌர்ணமி என்பது சந்திரனின் முழுப்பகுதியும் ஒளிரும் நிலைக்கு சொல்வதாகும்.அமாவாசை என்பது அதற்கெதிராக சந்திரனில் எந்த பகுதியும் ஒளிராத நிலையாகும்.இதனை கிரகணம் ஏற்படும்போதே நம்மால் காண முடியும்.இந்த அமாவாசை ஏற்பட்டு சூரியன் மறையும் வரை உள்ள காலப்பகுதியில் பிறை தென்பட தேவையான காலப்பகுதி அளவிடப்படும்.
எனவே பிறைக்கு பிறப்பு இல்லை இறப்பு இல்லை அது சடப்போருளோ சக்தியோ இல்லை என்ற பேசுபொருளுக்கு சம்மந்தம் இல்லாத விளக்கங்களை இவர் முன்வைப்பது இவருக்கு ஏதோ தெரிந்ததை பேச முனைகிறார் என்பதை எடுத்துகாட்டுகிறது.
பிறை பிறப்பது என்றால் வானியல் கூற்றுப்படி என்ன அர்த்தம் என்பதைக்கூட அறியாமல் சடப்பொருளாம் சக்தியாம் என்று உளறுகிறார்.வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று திசைகளை பற்றி பேசினாலும் இவர் அது சடமா சக்தியா என்று வரட்டுவாதம் செய்வார் என்பதை புரியமுடிகிறது.
“இந்தப் பலயீனமான விம்பத்தை ஏற்படுத்தும் சொற்ப அளவான ஒளி சூரியனுக்கு சந்திரனுக்கும் புவிக்கும் இடையில் பயணிக்கும் போது அதன் வளியில் ஏராளமான தடைகள் இருக்கின்றன.”
இவ்வாறு ஆக்கில் உளறுகிறார்.நாம் இதை மறுத்தோமா?எமது முன்னைய கட்டுரையில் பிறை தென்படுவதை தடுக்க கூடிய சந்திரனின் பிண்ணனி திரையில் உள்ள தடைகள் முன்னணி திரையில் உள்ள தடைகள் பற்றி எழுதியே உள்ளேன்.
சந்திரனில் ஏற்படும் இந்த ஒளியை பார்க்க முடியாமல் தடுக்கும் அந்த காரணிகள் கிண்ணியாவில் ஏற்பட்டது என்பதற்கான தரவுகளை தராமல் இப்படி எல்லாம் உள்ளது எனவே தென்படாது என்பது எந்த வகையில் ஆய்வாக கருதபப்டும்?
கிண்ணியாவில் பிறை பார்க்க முடியாது என்று சொல்வதற்கான காரணமான வளிமண்டலவியல் புவியியல் காரணிகளை எந்த அளவுகோலின் மூலம் அளந்தீர்கள்?கிண்ணியாவில் அதன் பெறுமான இலக்கம் என்ன?
இதை அளக்கும் அந்த குருவி எத்தனை நாளைக்குரிய எதிர்வுகூவலை சொல்லும்?ஐந்து நாட்களுக்குரியதை அது எதிர்வு கூவும் என்றால் நீங்கள் கிண்ணியாவில் பிறை தென்பட முன் எப்போது அந்த கருவியை உபயோகித்தீர்கள்?காலநிலையை எதிர்வு கூவும் கருவிக்கும் இதற்குமான தொடர்பு என்ன தொடர்பின்மை என்ன?
இதெல்லாம் அறியாமல் பேசினீர்களா?இல்லை அறிந்தும் அறியாதவர்போல குழப்புகிறீர்களா என்பதை உலகம் அறியும்.
வாதம் நான்கு:
“நிலைமை இவ்வாறிருக்க இவர் 9 மணித்தியாலங்களுக்குக் கணக்குச் சொல்கின்றார்.’”
எமது பதில்:
07.08.3013 திங்கட்கிழமை காலை மக்காவில் பிறை பிறந்த (அமாவாசை ஏற்பட்ட ) நேரத்தில் இருந்து சூரிய அஸ்தமன நேரம்வரை அதன் வயது ஆகில் சொன்ன வயதைவிட ஒரு மணி நேரம் வித்தியாசமாக நான் சொல்லியுள்ளேன்.இவர் தங்கி இருக்கும் இணையதளத்தில் ஒரு மணிநேரம் முன்னதாக அமாவாசை ஏற்படுவதாக காட்டுகிறது.பல இணையதளங்கள் ஒரு மணி நேரம் பிந்தியே அமாவாசை ஏற்பட்டதாக காட்டுகிறது.இந்த நேர வித்தியாசங்கள் இணையதளங்களில் உள்ள வித்தியாசத்தின்படி ஏற்பட்டதே தவிர நாமாக இட்டுக்கட்டவில்லை.இணையங்களில் இவர் தேடிப்பார்த்தால் நாம் கூறும் நேர வித்தியாசம் இருப்பதை இவர் அறிந்துகொள்வார்.
தான் கூறிய பிழையான ஆய்வை பற்றி பேசாமல் இதுபோன்ற அடிக்குறிப்பில் ஏற்பட்ட சில கருத்துவேறுபாடுகளை பற்றி பேசுகிறார்.இவரின் அறிவுக்கு ஏற்ப தலும்புகிறார்.பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.
வாதம் ஐந்து:
“நான் எந்த இடத்திலும் றமழான் ஆரம்பம்பற்றி எதனையும் பேசவே இல்லையே. நான் பேசியதெல்லாம் ஷவ்வாலைப் பற்றித்தானே. நான் ஷவ்வாலுக்குச் சொன்ன விளக்கத்தை வைத்துக் கொண்டு அவர் றமழானுக்கு விளக்கம் சொல்கின்றார். அது மட்டுமல்லாமல் நான் கிண்ணியாவைப் பற்றி பேசுகின்றபோது அவர் சஊதியைப் பற்றிப் பேசுகின்றார். ஏன் இந்த முரண் மூளைக் கோளாறு? அதாவது தனக்குப் பிடிக்காதவகளின் மீது எந்தப் பழியையும் சுமத்த இவர் தயங்கமாட்டார் என்பதனை இதனால் இவர் நிருபிக்கின்றார்.”
எமது பதில்:
நீங்கள் பேசியது ரமலான் ஆரம்பமோ ஷவ்வால் ஆரம்பமோ என்பது எமது வாதத்தின் கருப்பொருள் அல்ல.பிறையை நீங்கள் ஏற்றுகொள்ளும் ஆய்வாளர்கள் என்ன காரனத்திற்காக காண முடியாது என்று சொல்கிறார்களோ அந்த காரணங்களில் கருத்து வேறுபாடுகளை காண முடிகிறது என்பதற்காக அரபு வானியல் ஆய்வாளர்கள் சொன்ன நேர வித்தியாசங்களை பற்றி முன்வைத்தேன்.
சூரியன் சந்திரன் அஸ்தமிக்கும் நேரங்களை துல்லியமாக கணித்து அதில் ஏகோபித்த கருத்தில் வானியல் ஆய்வாளர்கள் இருப்பதுபோல் சூரிய அஸ்தமனத்தின் பின் சந்திரன் மறைந்து எத்தனை நிமிடங்களின் பின் பிறை தென்படும் என்ற விடயத்தில் உங்கள் ஆசான் முஹம்மத் ஷவ்கத் அவ்தா வின் கருத்துக்கு மாற்றமாக பல வானியல் ஆய்வாளர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த தரவுகள் எல்லாம் தரப்பட்டது.
கிண்ணியாவை பற்றி நீங்கள் பேசியது ஜோர்தான் நாட்டின் ஆய்வாளர் தகவல் அடிப்படையில் இருந்தால் உங்கள் அதே கிண்ணியா விடயத்தில் அரபு ஆய்வாளர்கள் கருத்தை நான் கொண்டு வருவதில் என்ன பிழை உள்ளது ?மண்டையில் தட்டியோ குட்டியோ சொன்னால்தான் இது புரியுமா?
வாதம் ஆறு:
“குறித்த இத்தினத்தில் கிண்ணியாவில் வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ தலைப்பிறை தெரியும் என்று சொன்ன வானியல் ஆய்வாளர் ஒருவரது பெயரைத்தானும் அஸ்ஹரியினால் கொண்டுவர முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால் அவர் ஒரு பித்தலாட்டக்காரர் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.”
எமது பதில்:
எந்த ஒரு மாதத்திலும் பிறை 29 யில் பிறை பார்ப்பது எமது கடமை இதற்கு வானியல் ஆய்வாளர்கள் ஆதாரத்தை கேட்பது உங்கள் அடிப்படை அறிவற்ற நிலையை காட்டுகிறது.
இந்த இடத்தில் ஆதாரம் கேட்பதற்கு தகுதியானவன் நான்தான் ஆகில் அல்ல.இந்த தினத்தில் பிறை பார்க்க முடியும்.வானியல் ஆய்வாளர்கள் பார்க்க முடியாது என்று சொன்ன நாட்களில் உலகில் பல இடங்களில் பிறை தென்பட்டுள்ளது இதுவே அதற்கான ஆதாரம்.
1992 ஆம் ஆண்டு நாசா விஞ்சானிகள் உட்பட மத்திய கிழக்கு ஆய்வாளர்கள் அனைவரும் ஏகோபித்து பிறை தென்பட வாய்ப்பு இல்லை என்று கூறியும் ஷவ்வால் பிறை கண்டு பெருநாள் அறிவித்ததை ஆதாரமாக கொண்டு கிண்ணியாவில் பிறை தென்பட வாய்ப்பு இருந்தது என்று எனது பிரதான வாதமாக இந்த வானியல் ஆய்வாளர்களை மிஞ்சிய தகவலை தந்தேனே அந்த யானை போன்ற பெரிய தகவலை இருட்டடிப்பு செய்துவிட்டு அது பற்றி எதுவும் பேசாமல் நழுவிய ஆக்கில் கட்டுரையில் தென்பட்ட பூனை அளவு உள்ள அடிக்குறிப்புகளை ஆய்வு செய்து மறுப்பு தந்துள்ளாராம்.
இப்போது நமது கேள்வி கிண்ணியாவில் பிறை தென்படுமா இல்லையா?தென்படும் என்பதற்கு வானியல் கூற்றுக்கு மாற்றமாக பிறை தென்பட்ட நிகழ்வுகளை ஆதாரமாக் தந்துள்ளேன்.இது போதாது என்று தக்க காரணம் சொல்லுங்கள் இன்னும் தருகிறேன்.
அதே நேரம் பிறை 29 யில் அடுத்த மாத பிறை தென்பாடாது என்பதற்கு நீங்கள் சொல்லும் கிண்ணியாவில் பிறை பார்க்க முடியாது என்று சொல்வதற்கான காரணமான வளிமண்டலவியல் புவியியல் காரணிகளை எந்த அளவுகோலின் மூலம் அளந்தீர்கள் ?
கிண்ணியாவில் அதன் பெறுமான இலக்கம் என்ன ?அதற்கான AOD என்ன?இதை எப்போது அளப்பது?
இதற்கான ஆதாரங்களை தந்துவிட்டு அந்த காரணங்கள் கிண்ணியாவில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது அதன் பெறுமானம் இதுதான் என்று வாதிடுங்கள்.இந்த ஆதாரங்களை எல்லாம் துல்லியமாக தராவதவரை கிண்ணியாவில் பிறை தென்பட வாய்ப்பு இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எந்த ஒரு மாதத்திலும் பிறை 29 ஆம் நாள் பிறை பார்க்க வேண்டும்.இந்த தினத்தில் பிறை தென்பாடாது என்று துல்லியமான ஆய்வுகள் சொல்லாதவரை அதற்கான ஆதாரத்தை தென்படாது என்று சொல்பவர் தராதவரை தென்படும் என்பதுதான் ஆதாரம்.ஆகில் ஆதாரம் தரவேண்டிய இடத்தில இருந்துகொண்டு நம்மிடம் ஆதாரம் வேண்டுமாம் என்று கேட்கிறார்.
இவர் ஏற்றுகொள்ளும் ஆசிரியர் முஹம்மத் அல் அவ்தா அவர்கள் அல் ஜசீரா தொலைக்காட்சியில் நேரடியாக சொல்கிறார்:
2011 ஆம் ஆண்டின் ரமலான் பிறை இன்றைய தினம் எகிப்தில் தென்பட வாய்ப்பு இல்லை என்று ஆனால் அதே தினம் எகிப்தில் பிறையை கண்ணால் கண்ட சாட்சியின் தகவலை நேரடியாக அவரின் முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிடுகிறார் தொடர்பு கொண்டவர்.அப்போது இவரின் ஆசான் அவ்தாவின் முகத்தில் மாற்றத்தை உணர முடிந்தது.இதை உங்கள் ஆசிரியரிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.இதுதான் உங்கள் ஆசானின் ஆய்வுகளும் அதன் உண்மை தன்மையும்.குச்சியே கோணலாக இருந்தால் அதன் நிழல் நேராகுமா?ஆசிரியரே இப்படி சரிகினால் மாணவர் எப்படி இருப்பார் என்பதை சொல்லவா வேண்டும்?
வாதம் ஏழு:
“தொலைநோக்கிகளுக்குத் தென்பட வேண்டுமாக இருந்தால் அடைப்பட்டிருக்கவேண்டிய இழிவுக் கோணப் பெறுமானமான 7 பாகையை சந்திரன் தாண்டிவிட்டிருந்தாலும் பிறைத்தோற்றம் இன்னும் பலவான காரணிகளில் தங்கியிருக்கின்றது. அவை சாதகமாக இல்லை என்பதனால் அது தொலைநோக்கிகளுக்கும் தென்படமாட்டாது. என்பதுதான் சரியான புரிதல். பிழை காணவேண்டுமே என்பதனால் அவசரத்தில் பின்பகுதியை விட்டுவிட்டார் அஸ்ஹரி. இது பெரும் மோசடியாகும்.”
எமது பதில்:
முதல் காட்டுரையில் கிண்ணியாவில் பிறை தொலைநோக்கியால் கூட தென்பட வாய்ப்பு இல்லை என்று கூறிய இவர் இரண்டாம் கட்டுரையில் தொலைநோக்கிக்கு பிறை தென்பட வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தார்.இதை நாம் முரண்பாடு என்று சுட்டிகாட்டியதும் விளக்கம் என்று மழுப்புகிறார்.
முதல் கட்டுரையில் அவர் கூறியதை கவனியுங்கள்: சூரியன் அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு இல்லை.”
இரண்டாவது கட்டுரையில் இவர் கூறியதை பாருங்கள்:” இருந்தபோதும், நாம் தலைப்பிறையைத் தேடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டோம். இதற்குப் பின்வரும் நியாயங்கள் உள்ளன.
இத்தினத்தில் சூரிய அஸ்த்மனத்தின் பின்னர் இலங்கையின் மேற்கு வானில் சுமார் 15 நிமிடங்கள் வரை சந்திரன் பயணிக்கின்றது. மேலும் தொலைநோக்கிகளுக்குத் தோற்றக்கூடிய சூரிய-சந்திர-புவி இடைக்கோணப் பெறுமானம் எட்டப்பட்டிருக்கின்றது. அசாதாரணமாக சந்திர விம்பம் தோற்றுகின்ற திரையான வானம் இருளடையுமாக இருந்தால், அதாவது சந்திரன் நிலைகொண்டிருக்கும் இடம் தவிர்ந்த வானின் ஏனைய பகுதிகள் அனைத்தும் மேகங்களால் சூழப்பட்டு இருளடையுமாக இருந்தால் ஒருவேளை சந்திர விம்பம் பிறையாகத் தோற்றம் தர இடமுண்டு.”
கிண்ணியாவில் ஷவ்வால் பிறை வெற்றுக்கன்னுக்கு தென்பட வாய்ப்பு இருந்தாக இரண்டாவது கட்டுரையில் சொல்லிவிட்டு முதல் கட்டுரையில் தொலைநோக்கிக்கூட தென்பட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார் ஆகில்.வெற்றுக்கண்ணுக்கு தென்பட வாய்ப்பு இருப்பதாக இரண்டாம் கட்டுரையில் கூறிய ஆகிலுக்கு தொலைநோக்கியால் பார்க்கவே சாத்தியம் இல்லை என்று முதல் கட்டுரையில் கூறி முரண்படும் மூளைதான் மண்டையில் உள்ளதா?முரண்பட்டது தெளிவு என்று ஆகியும் அதை சுட்டிக்காட்டியும் முரண் இல்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லி மறுக்கும் பிடிவாதக்காரராக இருக்கிறாரே என்பதை வாசிப்பவர்கள் விளங்ககிகொள்வர்கள்.
கிண்ணியாவில் பிறை பார்த்தவர்கள் எப்படி இந்த அசாதாராண சூழ்நிலையை அடையவில்லை என்று கணித்தீர்கள்? அசாதாரண சூழ்நிலையில் காணும் நிலை என்று ஒரு நிலை இருப்பதாக சொல்லும் நீங்கள் கண்டவர்கள் அந்த அசாதாரண சூழலை அடையவில்லை என்று சொல்வதற்கான ஆதாரம் என்ன?நீங்கள் அறிவுக்குருடராக இருப்பதால் அடுத்தவன் கண்குருடனாக இருப்பான் என்று நினைத்தீர்களா?
நாம் இவர் முரண்பட்டதாக சொன்னது உண்மை.இவர் முரண்பட்டதும் உண்மை.தொலைநோக்கிக்கு தெரிய வாய்ப்பு உள்ளது வெற்றுக்கன்னுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று சொல்லும் வானியல் ஆய்வாரளர்கள் உள்ளனர் ஆனால் வெற்றுக்கன்னுக்கு தெரிய வாய்ப்பு இருக்குமாம் தொலைநோக்கிக்கு தெரியாதாம் என்று கூறும் முதல் வானியல் ஆய்வாளர் ஆகில் என்ற ஜாஹில்தான்ஆகிளுக்கு எதிர்ச்சொல் ஜாஹில் ஆகும்.
வாதம் எட்டு:
“முரண்பாடு மூன்றில் பிறை தென்படுவதற்கு சூரியன் மறைந்ததிலிருந்து 15 நிமிடங்களாவது தாமதிக்க வேண்டும் என்று இவர் கூறுகின்றார். ஆனால் அரபு வானவியல் ஆய்வாளர்கள் 7 அல்லது 10 நிமிடங்கள் தாமதித்தாலே பிறை தென்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். என்று அஸ்ஹரி கூறுகின்றார்.
இவர் தனது வாதத்துக்கு ஆதாரமாக எந்தவொரு அரபு வானியலாளரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருந்தால் அவர் அதனை முன்கொண்டுவரட்டும். இல்லாவிட்டால் அரபு வானியலாளர்கள் மீது அபாண்டம் சுமத்திய பழியை அஸ்ஹரி ஏற்றுக் கொள்ளட்டும்.”
எமது பதில்:
பிறை தென்பட சூரியன் மறைந்ததில் இருந்து 15 நிமிடமாவது சந்திரன் தாமதிக்க வேண்டும் என்று ஆகில் கூறுகின்றார்.இதற்கு மறுப்பு கொடுத்த நான் சூரியன் மறைந்ததில் இருந்து சந்திரன் 7 அல்லது 10 நிமிடங்கள் தாமதித்தாலே பிறை தென்பட வாய்ப்பு உள்ளது என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்று கூறினேன்.
இதற்கு மறுப்பு கொடுத்த ஆகில் அவர்கள் தான் சொன்ன 15 நிமிடத்திற்கான ஆதாரத்தை இதுவரை முன்வைக்காது அதை சொன்ன ஆய்வாளர்கள் யார் என்பதை முன்வைக்காது நான் சொன்னதற்கு மட்டும் ஆதாரம் கேட்கிறார்.பார்தீர்களா?அதாவது ஆகில் சொன்னால் அது வஹி எனவே ஆதாரம் கேட்க கூடாது என்ற தோரணையில் இவர் பேசிவருவதை உணர முடிகிறதா இல்லையா?அடுத்தவன் சொல்லும் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கும் ஆகில் தான் சொன்ன கூற்றுக்கு எந்த விஞ்சானியை ஆதாரமாக முன்வைத்தார்?
ஆனாலும் நான் சொன்னதற்கு ஆதாரமாக இவர் ஏற்றுக்கொள்ளும் ஒருவரே இருப்பதால் இவர் தான் சொன்னதற்கு ஆதாரத்தை வைக்கட்டும் நானும் முன்வைக்கிறேன்.அதன் பின் ஆகில் வண்டவாளம் இன்னும் தெரியவரும்.
வாதம் ஒன்பது:
“முரண்பாடு மூன்றிலேயே அவர் பிறை மறையும் நேரம் என்று பல நாடுகளின் நேரங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இங்கு மறுபடியும் சந்திரன் மறையும் நேரத்தை பிறை மறையும் நேரம் என்று குழப்பிக் கொள்கின்றார்.”
எமது பதில்:
பிறை மறைகிறது என்பதற்கு இவர் கொடுக்கும் மறுப்பு பிறை பிறப்பு பற்றி நான் சொன்னதற்கு என்ன உளறினாரோ அதுதான் இங்கேயும்.இவர் ஏற்றுகொள்ளும் முஹம்மத் அவ்தாவின் நாட்டு உயர் நீதிபதி பிறை அறிவிப்பு செய்யும்போது பிறை மறையும் நேரம் என்று ஒரு நேரத்தை சொல்கிறார்.இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.சந்திரனைத்தான் சொல்கிறார் என்று.இதை அவர் அவ்தா நேரடியாக பார்க்கும்போதே சொல்கிறார்.இவரின் ஆசான் அவ்தா கூட இதுபற்றி எதுவும் கூறவில்லை என்று இருக்க இவர் சம்மந்தம் இல்லாமல் உளறுகிறார்.ஆசிரியரின் நாட்டு நீதிபதியே இப்படி கூறிய பின் அதை ஆகிலின் ஆசிரியரே மௌனமாக இருந்து கேட்ட பின் இவருக்கு ஏன் வேண்டாத அக்கரை?
இவர் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொகுத்து எடுத்தால் இதே போன்று எத்தனை விடயங்களை மக்கள் பாஷையில் பேசி இருப்பாரோ அதே போலதான் மற்றவர்களின் பாஷைகளையும் புரிய வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இவருக்கு தெரியவில்லையா?நாம் மக்களை நோக்கி பேசுகிறோம் என்ற அறிவு இல்லாதவர் போலவே அடிக்கடி இப்படி உளறுகிறார்.
ஒரு இணையதள ஆசிரியருக்கு எவ்வாறு கட்டுரையை முன்வைப்பது என்று கூட அறியாத இவர் வைத்தியர் என்பதை ஏற்றுகொள்வது கஷ்டம்தான்.
இவர் எழுதுவதை வாசித்தால் சொல் விளையாட்டும் சொட்பயங்கரவாதமுமே இவரிடம் மிஞ்சும்.
வாதம் பத்து:
“சஊதி அரேபியாவைத் தவிர வேறு எந்த அரபு நாட்டிலிருந்தும் பிறை கண்டதாக அறிவிக்கப்படவில்லை. 07.08.2013 புதன்கிழமை சஊதி அரேபியாவிலே அமாவாசை நள்ளிரவு 12.26 மணிக்கு இடம்பெற்றது. அதே தினம் சூரிய அஸ்த்தமனம் மாலை 6.59 மணிக்கும். சந்திர அஸ்த்தமனம் மாலை 7.10 மணிக்கும் இடம்பெற்றது. இங்கு சஊதியின் சிவில் நாட்காட்டியின் விதிமுறைகள் அடையப் பெற்றிருப்பதனால் 08ம் திகதி வியாழக்கிழமை ஷவ்வால் முதல் நாளாக அங்கே அறிவிக்கப்பட்டது என்பதே உண்மை அன்றி சஊதியில் தலைப்பிறை கண்டதாக சஊதியின் வானியல் ஆய்வு நிலையங்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை.”
எமது பதில்:
சவுதியில் பிறை பார்க்கும் முறை பற்றி ஆகில் சொல்வதில் நாம் முரண்படவில்லை.சவுதியில் பிறை விடயத்தில் இந்த வழக்கம் இருப்பதோடு பிறையை பார்த்து சாட்சி சொல்லும் வழக்கமும் உண்டு. இவர் ஆசிரியர் அவ்தா அவர்கள் சென்ற வருடம் 2012 ரமலான் மாததுக்கான பிறை சவூதியில் தென்பட முடியாது என்று அவரின் வானியல் ஆய்வை முன்வைத்தார் ஆனால் அவர் நேரடியாக அல் ஜஸீராவில் பேசிக்கொண்டு இருக்கும்போதே பிறை தென்பட்டதாக சவுதியில் சாட்சிகள் சொல்லியுள்ளனர்.
இவரின் ஆசிரியர் முஹம்மத் அவ்தா எகிப்தில் பிறை பார்க்க முடியாது என்று சொன்னார் அங்கே பிரைபார்த்தார்கள் அதே போல சவுதியில் பிறை பார்க்க முடியாது என்று சொன்னார் சவுதியில் அதே தினம் பிறை பார்த்துள்ளனர்.அதே போல் இவரின் மாணவராக பீத்திகொள்ளும் ஆகில் கிண்ணியாவில் பிறை பார்க்க முடியாது என்று உளறினார் ஆனாலும் அங்கே மக்கள் பிறைகண்டனர்.
ஆகில் அஹ்மதின் ஆசிரியர் முஹம்மத் அவ்தாவை விட மிஞ்சிய நாசா வானியல் ஆய்வாளர்கள் ஈரான் ஆய்வாளர்கள் மத்தியகிழக்கு ஆய்வாளர்கள் எல்லோரும் ஏகோபித்து 1992 ஆம் ஆண்டு ஷவ்வால் பிறையை பார்க்க முடியாது என்று கூறியும் அந்த தினம் ஷவ்வால் பிறை தென்பட்டு பெருநாள் கொண்டாடிய வலாற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு நாசாவுக்கு தெரியாத வானியல் ஆய்வை ஆகில் செய்கிறாராம் அதை நாம் நம்ப வேண்டுமாம்.
ஆகில் பிறைக்கு கொடுக்கும் பிரயோசனம் அற்ற முயற்சியை வைத்திய துறையில் கொடுத்தால் அவர் வைத்தியம் செய்யும் நோயாளிகளின் மரண விகிதாசாரத்தை மட்டுப்படுத்த முடியும் என்று கூறி அவருக்கு இந்த கட்டுரையை மறுப்பாக கொடுக்கின்றேன்.
அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி

Post a Comment