நிர்வாணமடையும் கோத்தா !


உடுப்பில்லாமல் அம்மனமாக இருப்பதை கொஞ்சம் நாகரீகமாக காட்டத்தான் இப்படி சொல்லவந்தேன். மற்றும் படி ஆள் இப்ப அம்மனம்தான். உங்களுக்கு தெரியுந்தானே சிலருக்கு சில வேலைகள் செய்யாவிட்டால் நித்திரை வராதாம். அப்படி இந்த ஆளுக்கு அடிதடி, வெட்டு கொத்து, கட்டிட உடைப்பு, கொலை, கடத்தல் என்று ஏதாவது ஒரு சங்கதி காதில விழாவிட்டா நித்திரை வராதாம் என்று கேள்வி.

அதுதான் 2009ல புலிகளை அழித்த பிறகு நித்திர வராம ஆள் ரொம்ப கவலைபட்ட நேரமா பார்த்து யாரோ இந்த கிறீஸ் யக்கா”(பூதம்) விஷயத்தை இந்த ஆள்கிட்ட சொல்ல; இந்த ஆளும் அதிண்ட ஆழ அகலங்கள் விளங்காம காரியத்தில இறங்கினாரு. மக்கள் கிறீஸ் பூதத்திற்கு பயப்படத் தேவையில்ல. ஆனா கிறீஸ் பூதங்கள கண்டால் அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம், பொலீசிடமோ அல்லது ராணுவத்திடமோ சொல்லுங்கள் என்று அந்த ஆள் மக்களுக்கு சொன்னது கிறீஸ் பூதங்களுக்கும் கேட்டிருக்க வேண்டும் அதனால தான் அந்த பூதங்களும் ஓடி ஓடி களைச்சுபோய் ராணுவ முகாமுக்குள்ளதானே சரணடைந்தன.

ஆனா அந்த ஆள்ளிண்டை இந்த சேட்டையால் குழம்பிப்போன பொது மக்கள் ஆத்திரத்தில ஒரு அப்பாவி பொலீஸ்காரனை புத்தளம் பகுதியில கொண்டுபோட்டாங்க. அந்த பொலீஸ்காரண்ட சொந்த ஊர்காரங்களுக்கும் நல்லா தெரிஞ்சிட்டு து புத்தளத்தில் உள்ள முஸ்லீம் ஆள்களை அடிச்சு பிரயோசம் இல்லை, இந்த பூதத்திற்கெல்லாம் பெரிய பூதம் கோட் ஸூட் எல்லாம் போட்டு தலை நகரத்தில நடமாடுகிற ஆள் என்று. அதனால புத்தளம் பள்ளிவாசல் கொடுத்த நஸ்டஈட்டு பணத்தை வாங்கிக் கொண்டு பேசாம் இருந்திட்டாங்க அந்த சிங்கள மக்கள்.

அதன் பிறகு இந்த ஆள் கட்டிடம் உடைக்கிற கொந்தராத்து எடுத்தமாதிரி ஒரு 24 பள்ளிகளையும், ஒரு பெரிய புடவ கடையையும் ஆள்வச்சி உடைச்சி போட்டு இரண்டு இறைச்சி கடைகளையும் கொழுத்திட்டாரு. அட மறந்துட்டேன் இவர்கிட்டதானே அந்த உடைக்கிற கட்டுற அதிகாரசபை இருகிறது. அப்ப உடைக்கிற விஷயம் அவருக்கு சாதாரணம் தானே. அத்தோட நல்ல வருமானமுமாம். அட ஒரு மனுஷன் ஏடா கூடமா ஒன்றும் நடக்காட்டி வாழப் போறது ஆக ஒரு 60, 70 வருஷம் தானே, (ஏண்ட போட்டோவ பாத்து ஏண்ட வயச கேக்காதிங்க, அது வேற பிரச்சினைகள கொண்டுவந்துவிடும்) அதற்கிடையில் ஏன்னப்பா பணத்தில இவ்வளவு ஆசை? பெரிய உத்தியோகத்தில கெடைக்கிற சம்பளத்த வைச்சு நல்லா வாழ்கிறதோட மக்களுக்கும் கொஞ்சம் சேவ செஞ்சா நாம செத்தாலும் உலகம் போற்றும் என்ற விஷயம் இந்த ஆளுக்கு தெரியாது போல.

அதுதான் ஆள் வேற மாதிரி சிந்திக்கிறாரு. இப்ப இந்த பள்ளி உடைக்கிற விஷயங்களும் சாடமாடயா உலகத்துக்கு தெரிய வந்திட்டிது. நம்ம காதர் ஹாஜி, அஸ்வர் ஹாஜி இப்படி ஒரு 10, 15 ஹாஜிமார்களும் ஒரு 4,5 அஷ் ஷெய்க் மார்களும் இலங்கை முஸ்லீம்கள் ஆஹா ஓஹோ எண்டு இருக்கிறாங்க. கடற்கரையில, கோட்டல தமிழ், சிங்களம் எண்டு கூட பார்க்காம இப்தார் எல்லாம் குடுக்கிறாங்க. ஓட்டு கேக்கிர மேடையில் இந்த ஆளுக்கும் அவர்ட ஐயாவுக்கும் சண்டித்தனம் எல்லாம் காட்ராங்க. இதில இருந்து இலங்கை முஸ்லீம்கள் எவ்வளவு பலத்தோட இருக்கிறாங்க, பிரச்சினை இல்லாம இருக்கிறாங்க, யாருக்கும் அடிபணியாம இருக்கிறாங்க எண்டதற்கு வேறு என்னதான் அத்தாட்சி வேண்டும்?

இப்படி நம்ம ஆளுங்கட நெலைமைய பார்த்து பயந்த இந்த ஆள் நம்ம ஆளுங்க எல்லாம் தீவிரவாதிகள் எண்டும், நம்ம ஆளுங்களால தான் அவரிட ஆளுங்க கோபப் படுராங்க அதனால பள்ளிய ஒடைக்கிறாங்க எண்டு ஒடைக்கிற உண்மய தனக்கு தெரியாமலே ஒத்து கொண்டுட்டாரு. போன கிழம ஐ.நா.ச மனித உரிமை அம்மா நவி பிள்ளை வந்ததால இந்த ஆள் அவர்ட கூட்டாளிமார்கள் சம்பிக்க, ஞான சார எல்லாம் சத்தம் போடம இருந்தாங்க மேர்வின் மஹத்தியாவ தவிர. இப்ப மாகண சபை தேர்தல் எண்ட படியால இந்த மாசம் முடியமட்டும் இந்த ஆள் சத்தம் போடாம சும்மா இருப்பார் எண்டு பார்த்தா ஞான சார சம்பந்தன் ஐயாவ கைது செய்யின்றாரு. இந்த ஆள் முஸ்லீம்களை தீவிரவாதி எண்டு சொல்லி ஆளுக்காள் முதுகு சொறிஞ்சிகிட்டு இருக்கிறாங்க. இனி உலகத்தில் இருந்து எப்பிடி இஸ்லாமிய தீவிரவாதத்த வெல்லலாம் எண்டு இந்த ஆள் இனி உலகத்துக்கு பாடம் நடத்தி பொன்னாட போத்துறத்துக்கான தகுதிய பெறுவாரு. அந்த நேரம் தான் முஸ்லீம் மந்திரிகளுக்கிடையில பெரிய சண்ட வரவாய்பு இருக்கிது. அதுதான் யார் இந்த ஆளுக்கு பொன்னடை போத்துறதெண்ட விஷயம். அனேகமா அஸ்வர் ஹாஜிக்கா இல்லாட்டி பைசர் முஸ்தபாக்கா இந்த பாக்கியம் என்ற பிரச்சின தான். எப்படியோ அம்மனமாகிப் போன இந்த ஆள்ட மானத்த இவங்க போத்த போர பொன்னாடதான் மறைக்கும் எண்ட நம்பிக்க இந்த ஆளுக்கு நிறய இருக்கிறதாகவும் கேள்வி.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger