சிரியா மீதான தாக்குதல்: மத்திய கிழக்கைத் துண்டாடுவதற்கான ஸியோனிஸ சதி


Latheef-Farook

-லதீப் பாரூக்-
1947 ஆம் ஆண்டின் இராணுவ மனநிலையில்தான் அமெரிக்கா இன்றும் இருக்கின்றது. இதனை நிரூபிக்கும் வகையில் சிரியா அதிபர் பஷார் அல்- அஸதிற்கு எதிரானதொரு இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றார் பராக் ஒபாமா.
தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக படுகொலைகளை மேற்கொண்டு வரும் பஷார் அல் அஸாதை அடக்கும் வகையில் மேற்கொள்ளப்படக் கூடிய இந்த இராணுவ நடவடிக்கை மிக விரைவிலும், வரையறுக்கப்பட்ட வகையிலும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய தரைக் கடலில் இருந்து கடற்படை படகுகள் மூலமாக டோமஹாக் ஏவுகணைகள் ஏவப்படலாம் எனவும், இவை ஆட்சி மாற்றத்தை நோக்காகக் கொண்டதாக இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த முப்பது மாதங்களாக ஆட்சி மாற்றம் கோரிய சுன்னி முஸ்லிம்களை பஷார் அஸத் படுகொலை செய்து வந்த நிலையில், இது எதிர்பார்க்கப்படாத ஒரு விடயமும் அல்ல.
சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் இந்தக் குற்றங்களை பஷார் பட்டப் பகலில் இழைத்துக் கொண்டிருந்தார். சுன்னி முஸ்லிம்களைக் கொலை செய்து, சிரியாவை இரத்தக் காடாக மாற்றுவதற்கு போதுமான அவகாசத்தை சர்வதேச சமூகமும் வழங்கியது.
ஐ.நாவும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, பஷார் கிராமம், கிராமமாக, நகரம், நகரமாக அழித்துக் கொண்டிருந்தார். சிரியாவின் கீழ் கட்டுமாணங்கள், மக்கள் குடியிருக்கும் கட்டிடங்கள், வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. இதே வேளை ஆயிரக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். அஸாதின் அரக்கத்தத்தனமான அரசாங்கத்தை பாதுப்பதற்காகவே இத்தனையும் ஈவிரக்கமின்றி நடந்தேறியது.
மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டமைக்கும் மேற்கு ஊடகங்கள் வேறு கதைகளை கட்டவிழ்த்து விட்டாலும்,  பொதுவாகவே முஸ்லிம் நாடுகள் அழிக்கப்படும் விடயத்தில், வல்லரசுகள் அனைத்துமே நெருங்கிய  ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றன. இங்கு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய சக்திகள், சவூதி அரேபியா மற்றும் எண்ணெய் வளம் மிக்க அரபுலக முல்லாக்களின்  உதவியோடு, பஷாருக்கு எதிராக அணி திரண்ட சிரியர்களுக்கு ஆயுதங்களை வழங்கின. மறுபுறத்தில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் என்பன பஷாருக்கு பக்க பலமாக நின்றன.
தவிர்க்க இயலாமல் சிரியர்களே சிரியர்களைக் கொலை செய்யும் நிலை ஆரம்பமானது. மத்திய கிழக்கைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, பிராந்தியத்தைப் பிரச்சினையில் தத்தளிக்க வைத்து, அதன் மூலம் இஸ்ரேலின் பிராந்திய மேலாண்மையைப் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்ற ஸியோனிஸ்ட்டுகளுக்கும் இதுதான் அவசியமானது என்பதும், இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரலையே அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா என்பன நடைமுறைப்படுத்துகின்றன என்பதும்,  அமெரிக்க ஆணைகளை தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக வேண்டி, அரபு ஆட்சியாளர்கள் அணுவணுவாகப் பின்பற்றுகிறார்கள் என்பதும் பொதுவான உண்மைகள்.
எழுபதுகளில் இருந்தே சுன்னி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பது ஆளும் அஸாத் குடும்பத்தின் ஒரு குடும்பப் பழக்கமாக இருந்து வருகிறது. உதாரணமாக, அஸாதின் மறைந்த தந்தை ஹாபிஸ் அல் அஸாத், லெபனான் சிவில் யுத்த காலத்தில் தெல் அல் ஸாடார் அகதி முகாமில் இருந்த பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கும் பேரில் தனது படைகளை அனுப்பி இருந்தார். பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக முப்பதாயிரம் அகதிகளை அது கொன்று குவித்தது.
அவரது கொடுமைக்கெதிராக ஹொம் நகரில் எழுந்த மக்கள் எழுச்சி ஒன்றையும் இதே பாணியில் ஹாபிஸ் அடக்கினார். அதில் சுமார் முப்பாதாயிரம் சுன்னி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பள்ளிகளிலும், பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்திருந்த அகதிகளை அவர் ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடின்றிக் கொன்று குவித்தார்.
இருந்த போதும் அமெரிக்காவோ, வேறு எந்த நாடோ ஹாபிஸைத் தண்டிக்க முன்வரவில்லை.
பதிலாக 1990/ 91 வளை குடா நெருக்கடி காலத்தில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜேம்ஸ் பேகர் டமஸ்கஸுக்கு விஜயம் செய்தார். சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹாபிஸை சந்தித்து, ஈராக்கிற்கு எதிரான தாக்குதலுக்கான அவரது ஆதரவையும் பெற்றுக் கொண்டார். (அநேகமாக வெளிநாட்டு உதவி என்ற பெயரில் அவர் இலஞ்சம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்).
சதாம் ஹுஸைன் அமெரிக்காவிற்கு நல்ல பிள்ளையாக இருந்த காலத்தில், குர்திஷ் மக்களுக்கு எதிராக விஷ வாயு பிரயோகித்த போது, அமெரிக்கா கண்களை மூடிக் கொண்டு மௌனம் காத்தது.
இத்தகைய நிலையில், இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதால், சில நூறு பேர் கொல்லப்பட்டதற்காக இவ்வளவு அவசரமானதோர் இராணுவ நடவடிக்கை ஏன் என்ற கேள்வி நியாயமானதுதான். இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுப்படுவதை, சிரியா பொறுத்தமற்ற முறையில் மறுத்திருந்தாலும், சிரியா தன் சொந்த மக்கள் மீது இரசாயன ஆயுதம் பாவித்ததாக அமெரிக்கா தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறது.
ஜேர்மனி, பிரிட்டன் உள்ளடங்கலாக, ஒன்றன் பின் ஒன்றாக, பல ஐரோப்பிய நாடுகள், தாம் சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் பங்குபற்றப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்க மக்களின் ஆதரவின்றி, காங்கிரஸின் அனுமதி இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இல்லாமல், பிரிட்டனின் உதவி இல்லாமல், சிரியாவை ஒபாமா தாக்கப் போகிறார்.
பத்தி எழுத்தாளார் Finian Cunningham பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “நேர்மையற்ற அமெரிக்கா உணர்ந்து கொள்ளாத அம்சம் என்னவென்றால், அவர்கள் தமது இஷ்டத்திற்கு செயற்பட்டு வருகிறார்கள். சிரியா மீதான அவர்களது அவசர நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கப் போவது சவூதி அரேபியாவும், இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குற்றவாளி அரசாங்கமான இஸ்ரேலும் மாத்திரம் தான்”.
தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற விதத்தில், மத்திய கிழக்கைப் பிரிப்பதற்கு திட்டமிடுகின்ற இஸ்ரேலின் திருகுதாளங்களை ஜபர் எம். ராமினி பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்: “சிரியாவில் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டமை குறித்த புலனாய்வுத் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பது ரகசியமானதல்ல. இஸ்ரேலிய புலனாய்வுப் பிரிவான மொஸாட்டில் இருந்தே அது கிடைத்தது. “ஏமாற்றுவதன் மூலமாக யுத்தத்தை முன் கொண்டு செல்வாய்” என்ற மொஸாட்டின் தாரக மந்திரத்தையும் நீங்கள் அறிந்திருந்தால், விடயம் மேலும் தெளிவாகிறது”.
நாடுகளைத் துண்டு, துண்டாக உடைப்பதையும், பலப் பிரயோகம் மூலம் மற்றவர்களை அடிபணியச் செய்வதையும் அடிப்படையாகக் கொண்ட Oded Yinon முன்வைத்த “1980 இற்கான இஸ்ரேலின் மூலோபாயத் திட்டம்” பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“இஸ்ரேலின் நிலைத்தலுக்கு: 01. ஏகாதிபத்திய பிராந்திய சக்தியாக மாறுதல் 02. இருக்கின்ற அரபு அரசுகளை சிறு சிறு பகுதிகளாக உடைத்தல். ‘சிறிய’ என்பது ஒவ்வொரு அரசினதும் இன ரீதியான பரபம்பலையே (Composition) குறிக்கும். விளைவாக, இன அடிப்படையில் பிரிந்த அரசுகள் இஸ்ரேலின் செடலைடுகளாக இருக்கும் என சியோனிஸ்டுகள் நம்புகிறார்கள். இஸ்ரேலின் இருப்புக்கான உள்ளார்ந்த மானசீகமான சட்ட பூர்வத் தன்மையையும் அது வழங்கும்”.
அரபு அரசுகள் சிறு சிறு பகுதிகளாக உடைக்கப்பட வேண்டும் என்ற கருத்து இஸ்ரேலின் மூலோபாய சிந்தனையில் மீண்டும் மீண்டும் உருவாகின்றது. உதாரணமாக, Ha’aretzபத்திரிகையின் இராணுவ செய்தியாளரான Ze’ev Schiff (பெரும்பாலும் இஸ்ரேலில் இது தொடர்பில் மிகக் கூடுதலான அறிவு கொண்டவர்) ஈராக்கில் இஸ்ரேலிய நலன்களுக்கு சாதகமாக நடக்க முடியுமான ‘உயர்ந்த பட்ச’ அம்சமாக  “ஈராக்கை சுன்னி அரசு, ஷிஆ அரசு மற்றும் குர்திஸ்தான் அரசு என உடைப்பதை சுட்டிக் காட்டுகிறார். (  (Ha’aretz 6/2/1982)உண்மையில், திட்டத்தின் இந்த அம்சம் மிகப் பழமையானதாகும்.      
அவர்களது பலமான ஆதரவாளர்களான அமெரிக்காவின் பங்கும் மிகத் தெளிவானது. தொடர்ந்து யினொன் சொல்கிறார்:
அமெரிக்க நியோ கன்ஸர்வேடிவ்களுடனான பலமான தொடர்பு மிகப் பிரபல்யமானது. ……….. வாயளவில் சோவியத்திடம் இருந்து மேற்கைப் பாதுகாத்தல் என சொல்லப்பட்டாலும், சமகால இஸ்ரேல் அதிகார மையத்தினது இலக்கு தெளிவானது – “ஏகாதிபத்திய இஸ்ரேலை ஒரு உலகளாவிய சக்தியாக மாற்றுதல்”. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஷெரோனின் நோக்கம் ஏனையவர்கள் அனைவரையும் ஏமாற்றிய பிறகு அமெரிக்கர்களையும் ஏமாற்றுவதுதான்”.     
பெரும் தொகையான அமெரிக்கர்கள் உண்மையில் ஏமாற்றப்படவில்லை. அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை எவ்விதம் தவறாக வழிநடாத்தப்பட்டு வருகிறது என்பது பற்றி பலர் கதைத்திருக்கிறார்கள். தொடர்ந்து கதைத்தும் வருகிறார்கள். எனினும், மத்திய கிழக்கு நிலங்கள் துண்டாடப்படுகின்ற நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஈராக், சிரியா, எகிப்து, லிபியா நிலவரங்கள் இப்பின்னணியில் இருந்தே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இவை அனைத்திலும் அரபிகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் தமது குறுகிய, தமது கோத்திர நலன்களை நிறைவு செய்து கொள்வதிலும், போட்டியாளர்களை அடக்குவதிலும், வொஷிங்டன் ஊடாக டெல் அவிவ் இலிருந்து வருகின்ற கட்டளைகளை நிறைவு செய்வதிலுமே குறியாக இருக்கிறார்கள். யினொன் திட்டம் இதனை மிகவும் சரியாக வர்ணிக்கிறது.
பலஸ்தீனியர்களைப் பொறுத்த வரை அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். புறம் ஒதுக்கப்படுகிறார்கள். யினொன் திட்டத்தின் குறிப்புக்களின் படி, இஸ்ரேலிய விரிவாக்கல் திட்டத்தின் ஒரே இலக்காக அவர்கள் இருக்கா விட்டாலும், முதன்மையான இலக்காக அவர்களே இருக்கிறார்கள்.
பலஸ்தீனியர்களைப் பலஸ்தீனில் இருந்து இடம் பெயர்க்கும் ஸியோனிஸ கொள்கை மிகவும் உறுதியானதொரு கொள்கை. எனினும், பிரச்சினை காலங்களில் இது கூடுதல் வேகத்தில் வேலை செய்கிறது. ஆகவே, சிரியப் நெருகடிக்கான கொல்லி இஸ்ரேலால் வைக்கப்பட்டிருக்கலாம். எனவேதானே பலஸ்தீனிய நிலமும், வளங்களும் திருடப்பட்டு வருகின்றமை கவனிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யலாம்?
அமெரிக்கா கடந்த நூற்றாண்டின் அரைப் பகுதியில் இருந்து, இஸ்ரேலின் சண்டித்தனத்தையும், யுத்த அபராதங்களையும் கண்டு கொள்ளாமல், பில்லியன் கணக்கான அமெரிக்க  டொலர்கள் உதவியாகவும், யுத்த தளபாடங்களாகவும் வாரி வழங்கி வந்தது. அவ்வாறு நடக்காமல் இருந்திருந்தால் இதில் எதுவொன்றும் இடம்பெற்றிருக்காது. Moshe Dayan ஒரு முறை குறிப்பிட்டது இங்கு நினைவு கூறத்தக்கது. “எமது அமெரிக்க நண்பர்கள் எமக்குப் பணமும், ஆயுதமும், உபதேசமும் வழங்குகிறார்கள். நாம் பணத்தையும், ஆயுதத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம். உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து விடுகின்றோம்”.
எனவே, அமெரிக்காவினால் சிரிய நிலமையை மாற்ற முடியுமா? சந்தேகம் தான். வொஷிங்டன் என்பது இஸ்ரேலியக் கலனி ஒன்று மாத்திரமே என்று குறிப்பிட்டாலும், அது மிகையல்ல. மத்திய கிழக்கிற்கான இஸ்ரேலிய திட்டத்தின் பகுதிகளே அவை. அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பாதுகாத்தல் என்ற பெயரில் அவை விற்பனையாகின்றன.
அமெரிக்கர்கள் குழம்பி விடாமல் கவனமாக இருக்குமாறு முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷெரோன் ஒரு முறை தனது வெளிநாட்டமைச்சர் ஷிமோன் பெரஸ்ஸிடம் தெரிவித்த போது, “நாம், யூதர்கள்தான் அமெரிக்காவைக் கட்டுப்படுத்துகிறோம். அமெரிக்கர்களும் அதனை அறிவார்கள்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, அமெரிக்காவும், பிரான்ஸும், பிரித்தானியாவும் கூட சிரியாவைத் தாக்க வந்தாலும், அதில் வியப்பதற்கு எதுவும் இருக்க முடியாது. சிரியர்களைப் பாதுகாக்கும் போர்வையிலேயே அது நடக்கப் போகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger