(VIDEO) பதவி இராஜினா: தயாசிறியால் பாராளுமன்றில் அறிவிப்பு, முதலமைச்சர் வேட்பாளராக ஐ.ம.சு.கூவில் போட்டியிடுவேன் / சரத்தின் மருமகன் தனுன திலகரத்னவின் பாட்டி விடுவிப்பு

 

(VIDEO) பதவி இராஜினா: தயாசிறியால் பாராளுமன்றில் அறிவிப்பு-
ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி தயாசிறி ஜயசேகர தனது பதவி இராஜினாமா அறிவிப்பை சற்றுமுன்னர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து எதிர்வரும் வட மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்படுவேன் என தயாசிறி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயாசிறி இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக ஐ.ம.சு.கூவில் போட்டியிடுவேன்: தயாசிறி ஜயசேகர-
ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வட மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரத்தின் மருமகன் தனுன திலகரத்னவின் பாட்டி விடுவிப்பு-
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் பாட்டி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தனுனவின் பாட்டியான 85 வயதான விமலா திலகரத்னவே கோட்டை நீதவான் திலின கமகேவினால் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
வழக்கை தொடர்வதற்கு சட்டரீதியாக இடமின்மையால் வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.
தனுனவிற்கு 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி தங்குவதற்கு இடமளித்தமை தொடர்பில் சாட்சி இல்லை என்பதனால் சந்தேகநபரான விமலா திலகரத்ன குற்றவாளியில்லை என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தனுன திலகரத்தனவிற்கு பாதுகாப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவரது பாட்டி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனுனவின் பாட்டியான 85 வயதான விமலா திலகரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் கடந்த 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தனுன திலகரத்னவின் பாட்டியை விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று தீர்மானிக்கப்படும் என்று நீதிமன்றம் அன்று அறிவித்திருந்தது.
இந்த வழக்கின் பிரதிவாதியான விமலா திலகரத்னவின் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளாமல் அவரை விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜராக சட்டத்தரணி நீதிமன்றத்தில் அன்று கோரிநின்றார்.
இதனையடுத்தே, இதுதொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்த நீதவான் இன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவரை நீதவான் விடுதலை செய்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger