தேசிய பிரச்சினை தீர்வுக்கான அணுகுமுறை (முன்மொழிவுகள்) எனும் நூல் மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று புதன்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின்போது மக்கள் விடுதலை முன்னணியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக எஸ்.ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்க ஜே.வி.பியின் தீர்வுத் திட்டம் வெளியீடு
ஜே.வி.பியினால் தயாரிக்கப்பட்டுள்ள தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பிரவேசம் என்ற யோசனைகள் அடங்கிய தீர்வு திட்டம் அடங்கிய பொதி இன்று முற்பகல் கொழும்பு- 7 இலங்கை மன்ற கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை நோக்கிய திசைக்கு செல்லும் யோசனைகளாக இலங்கை மக்களும் முன் இந்த தீர்வு யோசனை பொதியை முன்வைப்பதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
அதனை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது, அவர் இதனை கூறினார்.
இந்த நிகழ்வில், ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பிரசார செயலாளர் விஜித ஹேரத், மத்திய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் உட்பட கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தவிர கலைஞர்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

Post a Comment