திருமண வைபவத்திற்காக துணிமணிகள் வாங்குவதற்கு துணையாக வந்த காதலன் வாடி வீட்டில் மயக்க மருந்தை குளிர்பாணத்துடன் கலந்து காதலிக்குக் கொடுத்து பல இலட்சக் கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகை, 13000 ரூபா ரொக்கப் பணம், மற்றும் உடைமைகளைத் திருட்டிக் கொண்டு சென்ற சம்பவம் வரகாபொல பொலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-
வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து விட்டு நாடு
திரும்பிய பெண் ஒருவர் தனக்கு ஒரு வரன் தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்த
சந்தர்ப்பத்தில் சில மாதங்களுக்கு முன் முன்பின் அறிமுக
மில்லாத ஒரு இளைஞன் சந்தித்துள்ளனான். அவ்விளைஞன் பார்வைக்கு மிக கவர்ச்சயாகவும்
இருந்துள்ளான். அதன் போது ஏற்பட்ட உறவின் படி யுவதியின் தொலைபேசி இலக்கத்தைப்
பெற்றுக் கொண்ட இளைஞன் தொடாந்து யுவதியுடன் தொலைபேசியில் உரையாடி வந்ததாக அப்பெண்
தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகப் பொலீஸார் தெரிவித்தனர்.
அதன் பின் அது காதலாக மாறி அடிக்கடி
காதலியின் வீடு தேடி வர ஆரம்பித்த காதலனின் அழகில் வீட்டாரும் மயங்கி விட்டனர்.
ஒரு நாள் திடீர் என வந்த காதலன் தமது
திருமணத்திற்கு திகதி குறிக்க பெற்றோர்களும் உறவினர்களும் வர இருப்பதாகவும்
இடுத்தமாதம் திருமணத்தை வைத்துக் கொள்வதற்கு திகதியையும் குறிப்பிட்டுள்ளான்.
இதனால் திடுக்கிட்ட பெற்றோர் செலவினங்களுக்
ஒழுங்குகள் செய்ய தேவையான பொருடகொளவனவு களுக்கு காலம் போதாது எனத் தெரிவிக்க, அத்தனை
செலவையும் தாம் பொறுப்பேற்று விட்டதாகவும் இப்பொழுது பணத்துடன்
தான் வந்துள்ளதாகவும் கேகாலை நகருக்குச் சென்று உடைகளைத்தெரிவு செய்யவரும்படி
அழைத்துள்ளான்.
காதலனின் ஆசை வார்த்தையில் வீழ்ந்த
பெற்றோருக்கு கும்பிடப் போன கோயில் குறுக்கே வந்தமாதரி இருந்துள்ளது. பெற்றோர்
வழியனுப்ப இருவரும் வெளியேறினர்.
நகைகளுக்குப் பொறுத்தமான முறையிலேதான் சாரி,பிளவுஸ்
தெரிவு செய்ய வேண்டி இருப்பதால் காதலியின் தங்க நகைகளையும் உடன் கொண்டு வந்தால்
அதற்கேற்ற முறையில் உடைகளைத் தெரிவு செய்து கொள்ளாம் என
காதலன் ஆலோசனை கூறியுள்ளான். வஞ்சனை அறியாத காதலியும் அவ்வாறே செய்ய கேகாலை நகரம்
முழுவதும் வெய்யிலில் அழைந்து திரிந்து பொருத்மான உடை கிடைக்கவில்லை. கிடைத்தாலும்
அதனை கொள்வனவெய்து தரும் காதலுக்குப் பிடிக்கவில்லை.
வேறு ஒர் இடத்திற்கு அல்லது வரகாபொல
நகரித்திற்சென்று தேடுவோம் என்று முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறிய அவர்களுக்கு பசி
தாகம் வாட்டியதால் தாகசாந்திக்காக இடைவழியிலுள்ள அம்பேபுஸ்ஸ வாடி வீட்டில்
இறங்கியுள்ளனர்.
கைகால்களைக் கழுவி முறையான ஓய்வை எடுத்துக்
கொள் வாடகை அறையும் பெறப்பட்டுள்ளது. ஏதும் அறியாத யுவதிக்கு அது பிறத்தியேக அறை
என்பது கூடப் புரிய வில்லை. சற்று நேரத்தில் அறையை விட்டு வெளியே வந்த காதலன்
குளிர்பாணத்திற்கு ஓடர் கொடுத்து வரும் வரை யுவதி முகம் கைகால் கழுவி வெளியே வந்த
போது காதல் இரண்டு கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்த குளிர்பாணத்தில் ஒன்றை
எடுத்துக் குடிக்க மற்றதை எடுத்து யுவதி குடித்துள்ளாள்.
சற்று நித்திரை போன்ற உணர்வு யுவதிக்கு
ஏற்பட்டுள்ளது.
விழித்துப் பார்கும் போது தான் ஏதோ ஒரு
வில்லங்கத்தில் இருப்துபோல்தெரியவர தனது கைப்பை திறந்திருப்பதையும் கண்டு, உதவிக்கு
காதல் பெயர் கூறி அழைத்துள்ளாள். அரவம் கேட்டு அதிற்பணிபுரியும் ஊழியர்கள்
ஓடிவந்தது தவிர காதலன் சென்று திக்கு தெரியாமல் போனது. தான் சேகரித்த பணம், நகை
உற்பட அனைத்து உடைமைகளும் திருடப்பட்டதைக் கண்டு தான் ஏமாற்றப்பட்தையும் அறிந்துத
யுவதி வைத்த கூச்சலில் வாடி வீட்டு ஊழியர்கள் பொலீஸ் நிலையம் அழைத்துச் சென்று
புகார் கொடுத்துள்ளனர். அங்கு பொலீஸாருக்குத் தெரிவித்த தகவலிலே
இவைகுறிப்பிடப்பட்டுள்ளதாக வரகாபொல பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
முன் பின் தெரியாத, கண்ட
தும் காதலால் ஏற்பட்ட விளைவு ஏனைய யுவதிகளுக்கும் பாடமாக இருக்கட்டும்.

Post a Comment