பிரி;த்தானிய பிரஜையும் தன்னார்வ தொண்டாளருமான அமரர் குர்ஹாம் சாக்கீயின் காதலில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று குர்ஹாம் சாக்கி தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டதுடன், அவரது ரஸ்ய காதலி விக்டோரியா அலாக்ஸான்ட்ரோவ்னா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, தாக்கப்பட்டிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் விக்டோரியா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என இலங்கை பாராளுமன்றில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்தானது முற்றிலும் பொய்யானது என டான்சூக் கூட்டிக்காட்டியுள்ளார்.
மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது , காவல்துறை விசாரணை அறிக்கையில் விக்டோரியா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை குறித்து அறிக்கையிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் விக்டோரியா இந்த சம்பவம் குறித்து சாட்சியமளிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விக்டோரியா தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரால் பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்ட அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment