அமெரிக்கா – இலங்கை கூட்டுப் பயிற்சி நடவடிக்கை!



அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது.பிளாஸ் ஸ்ரைல் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில், ஆண்டு தோறும் நடத்தப்படும், போரல்லாத கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் சிறப்புப் போர்முறைச் சமூகத்துடன், சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சி வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இதில், சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி, என்பனவும், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும், சிற ப்புப் படைப்பிரிவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger