நவீன தாத்தார்களில் இருந்து எகிப்தை மீட்க இப்னு தைமியாக்களே தேவை

- அஹ்மத் ஜம்ஷாத் -


அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! எகிப்திய அரசியல் பற்றி எனது கட்டுரைகளை வாசிக்கும் சிலர் எனது நிலைப்பாட்டை அறிந்துகொள்ள இந்த கட்டுரை பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
நவீன தாத்தார்களில் இருந்து எகிப்தை மீட்க இப்னு தைமியாக்களே தேவை என்ற இக்கட்டுரையை நான் எழுதியது சென்ற வருடம்   December 15, 2012 at 2:47am    ஆகும்.இது தற்போதைய நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் உங்ககளுடன் இதை பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த கட்டுரையில் எதை நான் எதிர்வு கூவி இருந்தேனோ அதுவே முர்சி அவர்களின் அரசுக்கு நடந்தது என்பதை இக்கட்டுரையை வாசிப்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்வர்.ஜனாதிபதி முர்சி அவர்கள் சில விடயங்களை செய்யவில்லை என்றால் அவர் ஆட்சி வீழ்ச்சியை அடையும் எனவே அதற்கான முன்னெடுப்புகள் முர்சி அவர்கள் செய்ய வேண்டும் என்ற விடயத்தை கட்டுரையில் சுட்டி காட்டியுள்ளேன்.
எனவே ஜனாதிபதி முர்சி அவர்களின் ஆட்சியின் போது நாம் எதை உணர்த்தி எழுதினோமா அதுவே தற்போது நடந்ததால் அவற்றை சுட்டிக்காட்டியே கட்டுரைகளை எழுதுகிறோம்.மாறாக கொள்கை பேதம் காரணமாக கட்டுரைகள் எழுதவில்லை என்பதை தெரியப்படுத்திகொள்கிறோம்.அந்த வகையில் கேழே கட்டுரையை நோக்கவும்)
முஸ்லிம்களின் வரலாற்றில் தாத்தார்கள் என்ற இஸ்லாமிய பெயர்தாங்கி கூட்டம் ஒன்று இருந்துவந்ததை நாம் அறிவோம் இஸ்லாமிய பெயரில் மதுபானங்களை வெளிப்படையாகவே அருந்தி பஞ்சமா பாவங்களை பரகசியமாக செய்து குழப்பம் ஏற்படுத்திய கூட்டம்தான் இவர்கள்.
ஹிஜ்ரி 702 யில் தாத்தர்கள் முஸ்லிம்கள் மீது மிகக்கொடிய மூன்றாவது படையெடுப்பை முடுக்கிவிட்டனர்.அன்றைய திமஸ்கில் முஸ்லிம்கள் பயபீதியை அடைந்தனர் தாதர்களின் ரவுடிசத்துக்கும் எண்ணிக்கைக்கும் திமஸ்கின் அரசு ஈடுகொடுக்குமா என்ற சந்தேகம் மக்களை ஆட்பரிக்க திமஸ்கை விட்டும் மக்கள் வெளியேற முற்பட்டனர் அன்றைய எகிப்தின் ராணுவமும் தனது உதவிக்கரத்தை தாமதப்படுத்தியதால் மக்கள் பய நிலையை அடைந்தனர்.
திமஸ்கின் ராணுவமும் அரசும் தாத்தர்களை எதிர்கொள்ள அஞ்சினர்.இந்த தருணத்தில்தான் வருகிறார் இஸ்லாத்தின் வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட தகுதியான இமாம் இப்னு தைமியா.இமாம் இப்னு தைமியாவின் சிந்தனை செல்நெறிகளில் மனித சமுதாயத்தின் தலைவிதி மாற்றபப்ட்ட அந்த வரலாறு அங்கே நிகழ்ந்தது.
தாத்தார்களுடன் போராட இப்னு தைமியா தலைமையில் அன்றைய உமரா ஆட்சியாலர்களுக்கிடையில் வட்ட மேசை மாநாடு நடந்தேறுகிறது.மக்கள் தாத்தார்கள் மீது கொண்ட பயத்தை தணிக்க இப்னு தைமியா மக்களிடம் பிரச்சாரத்தை முடுக்கிவிட வேண்டும் என்று அரசு கோருகிறது.முஸ்லிம்கள் எவரும் திமஸ்கை விட்டு வெளியேறக்கூடாது என்ற உபதேசம் இப்னு தாய்மியாவால் முன்வைக்கபடுகிறது.தாத்தார் அணியில் அல் குர்ஆணை சுமந்து நான் நின்றால் கூட என்னை கொலை செய்ய தயங்காதீர்கள் என்றார் இப்னு தைமியா.மக்களும் தைரியம் அடைந்தனர்.
இப்னு தைமியாவை நோக்கி கேள்வி எழுப்ப படுகிறது “தாத்தர்களும் முஸ்லிம்கள் தானே எதற்காக அவர்களுடன் போராட வேண்டும் என்று ?” இப்னு தைமியா சொல்கிறார் இவர்கள் கவாரிஜ்கள் போன்றவர்கள் அலி ரலி முஆவியா போன்றோரின் ஆட்சிக்கு எதிராக நின்றவர்கள் இவர்களுக்கு மாத்திரம்தான் ஆட்சி செய்யும் தகுதி உள்ளதாக எண்ணுபவர்கள் எனவே இவர்களுடன் போராடி அரச குழப்பங்களை தவிர்ப்பது கடமையாகும் என்றார்.
திமஸ்கின் ராணுவம் இப்னு தைமியாவை எகிப்தின் மன்னருடன் பேசி ராணுவ உதவிய பெற்று தர அனுப்புகிறது எகிப்து அரசும் திமஸ்கின் ராணுவத்துக்கு உதவுகிறது.இறுதியில் வெற்றி முஸ்லிம்களுக்கே உரித்தானது.
இவர்களின் நிலைபாட்டுக்கு கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாத கேடுகெட்ட அசம்பாவிதங்களையே எகிப்தின் லேபறல் மகாச்சார்பற்ற கூட்டம் செய்து வருகின்றனர்.
தாத்தார்களின் அதே நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாடாகவே எகிப்தின் தற்போதைய லேபறல் மதச்சார்பற்ற சாரார் இருப்பதை காண முடிகிறது.இஸ்லாம் எகிப்தின் சட்ட யாப்பில் அதிகாரம் செலுத்தக்கூடாது.இஸ்லாமிய வாதிகள் மக்களின் ஆதரவுடன் கூட ஆட்சி பீடம் வரக்கூடாது.இஸ்லாம் அரச சமூக கலாசாரத்தில் அங்கம் வகிக்க கூடாது என்ற கோட்பாட்டிலும் ஆபாசங்கள் மது விபச்சாரம் போன்ற பஞ்சமா பாத செயல்கள் பரவுவதில் முழுச்சுதந்திரமும் உள்ள தாராண்மை மதச்சார்பு போன்ற குப்ரிய கோட்பாட்டை ஈமான் கொண்ட ஒருவரே அரச தலைவராக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் உள்ளனர்.இவர்கள் சொல்லும் சாராரே ஆட்சிபீடம் வர வேண்டும்.ஜனநாயக ரீதியில் இவர்கள் சாராத இஸ்லாமிய வாதி ஆட்சி பீடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த ஜனநாயகத்தை கூட மறுத்து ரவுடிசத்தை தூண்டி வருகின்றனர்
நேற்று வெள்ளிக்கிழமை யாப்பை ஆதரித்து குத்பா செய்த அறிஞர் ஒருவரை பள்ளிவாயலின் உள்ளே வைத்து முற்றுகை இட்டு பல வாகனங்களை எரித்து நாசம் செய்துள்ளனர்.அரச அலுவலகங்களையும் ஜனாதிபதி கரியாலயங்களையும் பல நாட்களாக முற்றுகை இட்டு நாட்டின் ஸ்தீரனத்தன்மையை குழப்பி வருகின்னறனர்.
எகிப்தின் ஜனாதிபதியின் சாரதியை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அதிகமாக மக்கள் போக்குவரத்து செய்யும் நீண்ட பாலங்களை தடை செய்துள்ளனர்.பொது மக்களிடம் பயபீதியை ஏற்படுத்தியுள்ளனர்.இவர்களை கட்டுபடுத்த பொலிசார் துணிவில்லாமல் உள்ளனர்.முன்னால் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும் அதிகாரிகள் உயர் பதவியில் இன்னும் உள்ளதால் நிலைமை மோசம் அடைந்து வருகிறது.
இங்கே அரச பீடங்களில் உள்ள அதிகாரிகளின் நயவஞ்சக தனத்தின் காரணமாக அதிகார பலயீனத்தை எகிப்திய அரசு உணர்ந்துள்ள நிலையில்  இஸ்லாமிய அறிஞர்கள் பக்க பலமாக இருக்க தயாராக உள்ளனர்.இனியும் எகிப்திய அரசு முன்னால் நயவஞ்சக அதிகாரிகளை நம்பாமல் தமது அதிகாரத்தை பிரயோகித்து நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் இந்த கேடுகெட்ட நவீன தாத்தர்களை அடக்கு முயட்சிக்காவிட்டால் எகிப்திய அரசு மிக மோசமான விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.
அன்றைய திமஸ்கின் தலைவர்களுக்கு  தாத்தார்கள் போன்ற பெரும்படை சவாலாக இருந்தபோது இமாம் இப்னு தைமியா போன்றவர்கள் எவ்வாறு அரசுக்கு பக்கபலமாக இருந்தார்களோ அதே போன்றே இன்றைய எகிப்திய அரசுக்கு இஸ்லாமிய இயக்கங்களும் தலைவர்களும் பக்கபலமாக உள்ளதை உணர்ந்து எகிப்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
Share this article :

+ comments + 1 comments

July 23, 2013 at 10:52 PM

நன்றி சகோதரனே, ஆனால் நீங்கள் உங்களுடைய கட்டுரையில் செய்ய வேண்டும் என குறிப்பிட்டதனை செய்தனாளேயே ஆட்சி கவிழ்நதது என இதே தளத்தில் பிரசுரிக்கப்பட்ட வேறுபட்ட கட்டுரைகளில் காணக்கிடைத்தது

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger