முஸ்லிம்கள் மீது பலிபோடும் காவிகள்- இந்துத்துவ வாதிகள் கொலைகளில் கைதானவர்கள் விவரம் அம்பலம்! -



பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!

இங்கு இணைத்துள்ள சுற்றரிக்கைகளைப் (நோட்டீஸ்கள்) போல இன்னும் பல இடங்களிலும், அணைத்து செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா சக்திகள் ஆடிட்டர் ரமேஷ் கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி மக்களிடையே விஷமப் பிரச்சாரத்தையும், மதக்கலவரத்தை ஏற்படுத்துவும், மக்களிடையே பீதியை உருவாக்கி வருகிற மக்களைவை தேர்தலில் சில சீட்கலாவது பெற திட்டமிடுகிறார்கள்.

இவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா...? இங்குள்ள நோட்டிசைப் போல இன்னும் பல இடங்களிலும் இவர்கள் பரப்பும் இந்த கூற்று உண்மையா..?

அதிர்ச்சி தரும் உண்மைகள் செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன்..

முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று வேடம் போட்டு பந்த் நடத்தும் ப.ஜ.க. வின் வேஷம் கலைக்கும் ஆதாரங்கள். தேவையான இடங்களில் பகிருங்கள் இந்தியர்களே, தமிழர்களே..!.


1. 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட "முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் சரண்".


2. 23-10-2012 இல் வேலூரில் பா.ஜ.க. மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி என்பவரின் கொலையில் கைதானவர்களின் விவரம். கைதான ஆறு பேரும் இந்துக்கள்.


3. 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் விவரம். இதில் ஒரு இந்துவும், மூன்று முஸ்லிம்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் காரணம் இந்து முஸ்லிம் பிரச்னை அல்ல. சொத்து தகராறு.


4. 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மாந்தோப்பு ராமச்சந்திரன், முருங்கவாடி சண்முகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.


5. 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் என்பவர் கொலையுண்ட வழக்கில் போலீசார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆக, மேலே சொல்லப் பட்ட வழக்குகளில் ஒருவர் கூட இந்து முஸ்லிம் மதப் பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என்பது மிகத் தெளிவு.

இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும், உண்மைகள் இருந்தும், அயோக்கியத்தனமாக மக்களை பிரித்தாளும் கொள்கையை விதைத்து தமிழகத்தில் எப்படியாவது 1998ன் சூழலை திரும்ப கொண்டு வந்து பிஜேபிக்கு சில சீட்களாவது வாங்க இவர்கள் நடத்தும் வெறியாட்டத்தை நல்லவர்களே, நியாயவான்களே கண்டு கொள்ளுங்கள். இவர்களை அடையாளம் காணுங்கள்.
மக்களை சாதி, மதத்தால் பிரித்து கலவரத்தை தூண்ட நினைக்கும் இத்தகைய மனிதகுல விரோதிகளை இனம் கண்டு தனிமைப் படுத்துங்கள்.


நன்றி :
நிகழ்வுகளின் தொகுப்பு : நிழல்களும் நிஜங்களும்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger