‘நான் குற்றம் இழைத்தவன் என்று கட்சி மட்டத்தில் அல்லது ஏதேனும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியை இராஜனாமா செய்வேன்’ என பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் அமைந்துள்ள விஷ்னு ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“சில நாடோடி அரிசியல்வாதிகளை போன்று மற்றுமொரு தேர்தல் தொகுதியை நான்பொறுப்பேற்க தயாரில்லை” என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
“களனி எனது உயிரை போன்றது. நான் தத்தெடுத்த குழந்தையின் கையில் அதனை கொடுப்பதற்கு தயாரில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment