ஆள் பிடித்து
ஆளும்
நூல் பிடித்த
நூல்
கறை கரைந்து
நிறையும்
இறை இரந்த
இரை
மறையை வெளிக்காட்டும்
மறை
முறையாய் வழிகாட்டும்
உரை
தரையில் தறைந்த
நுரை
நிறையில் நிறைந்த
நிரை
முரணை முரணாக்கிய
திறன்
மனதைச் சரணாக்கிய
அரண்
நடையில் உயர்ந்த
தரம்
தடையில் வளர்ந்த
திறம்
தாரைவார்க்கும் கற்கைப்
பாடம்
கரைசேர்க்கும் ஒற்றை
ஓடம்
வாதம் வைக்கும் ஒரே
வேதம்
பேதம் போக்கும் ஒரே
நாதம்
வழிகெடுக்கும் வழியில்
நின்று
வழிக்கெடுக்கும் மொழியில்
ஒன்று
மார்வழியில் மாரடிக்கும்
மார்வலி மாந்தருக்கும்
நேர்வழியில் போர்தொடுக்கும்
ஒருவழிப் பாதையாகும்
புரட்டின்றி கவி
மிரட்டும்
பொய்யாக் கவி
திரட்டும்
வாயார மெய்யளிக்கும்
ஒய்யார இலக்கியம்
ஆபாசம் அற்ற
கலை
ஆள்பாசம் உற்ற
நிலை
கற்பனை கலக்கா
ஆலாபனை
நழுவுதல் இல்லா
தழுவுதல்
இசையில் இசைந்த
சொல்
எக்காலமும் வாசிக்கப்படும்
எக்காளம்
காலத்தைக் களமாக்கிய
முக்காலம்
காலாவதியற்று விதியான
மழைக்காலம்
ஆக்கம் - ரூஹூல் ரஸ்மி - சிலாபம்

Post a Comment