ஆரம்ப காலம் முதலே இக்வான்களின் தலைமயின் அரசியல் போக்கில் அதிருப்திகொண்டுவந்த இக்வான்களின் இளைஞர்கள் தற்போது தமது எதிர்ப்பை பிரகடனப்படுதியுள்ளனர்.
இக்வான்களில் இருந்து பிரிந்த மூன்று இயக்கங்களின் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
“சில நாட்களுக்கு முன்பு தேசிய பாதுகாப்பு நிலையத்தின் முன்னாள் ஆர்பாட்டக்காரர்கள் தொளுதுகொண்டிருந்தவேளை நூற்றுக்கணக்கான மக்கள் ராணுவத்தால் சுட்டுகொல்லபட்டனர்.
ராபிஆ அதவியாவில் ஆர்பாட்டம் செய்துகொண்டிருந்த மக்களின் உணர்வுகளை தூண்டி தேசிய பாதுகாப்பு நிலையத்துக்கு செல்லுமாறு ஆவேசமாக பேசிய இக்வான்களின் தலைவர் பதீவு அவர்களும் ஸப்வத் ஹிஜாசி அவர்களும் அங்கே செல்லவில்லை.அப்பாவி மக்களை அங்கு செல்லுமாறு தூண்டியவர்கள் இவர்கள் என்பதால் இவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை மனுவை நாம் ஆர்பாட்டத்தின் போது இக்வானிய உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ளோம்.
இக்வான்களின் தலைமை தமது அடிப்படை போக்கான தாவா மற்றும் சீர்திருத்தம் என்ற கோட்பாட்டுக்கு திரும்ப வேண்டும்.”
இக்வான்களில் இருந்து பிரிந்த “வன்முறையற்ற இக்வான்” இயக்க அமைப்பாளர் அஹ்மத் யஹ்யா கூறியதாவது.
“இக்வான்கள் சென்ற காலங்களில் விட்ட தவறுகளை திருத்திகொள்ளுமுகமாகவும் இக்வான்கள் தமது பாரம்பரிய தாவா சீர்திருத்த கொள்கைக்கு மீண்டு வரவேண்டும் என்பதற்காகவும் இந்த தலைமயில் இருந்து நாங்கள் பிரிகின்றோம்.
இக்வான்களின் தலைவருக்கும் “மக்தபுல் இர்ஷாத்” யின் தலைமை காரியாலய உறுப்பினர்களுக்கும் எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான விண்ணப்பம் ஒன்றை தயார் செய்துள்ளோம்.அதில் விண்ணப்பதாரியின் பெயர்,தேசிய அடையாள அட்டை இலக்கம், ஜமாத்தின் உறுப்பினர் இலக்கம், மாவட்டம் போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளோம்.
ஆர்பாட்டம் நடக்கும் ராபியா அல் அதவியா மற்றும் நஹ்லா மைதானங்களுக்கு சென்று இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ள உள்ளோம்”என்றும் அவர் கூறியுள்ளார்.
இக்வான்களில் இருந்து பிரிந்த “சுதந்திர இக்வான்கள்” இயக்கம் கூறியதாவது:
தொழுகையின்போது இறந்தவர்கள் உங்களை நம்பி வந்த மக்கள் இல்லையா?அவர்கள் உங்கள் பராமரிப்பின் கீழ் வளர்ந்தவர்கள் இல்லையா? எப்படி அவர்களின் உயிரோடு அலட்சியமாக நடந்துகொள்வீர்?நாட்டின் அமைதியின்மைக்கு எப்படி நீங்கள் காரணமாக அமைவீர்?
என்று இக்வான்களின் தலைவரான பதிவு அவர்களையும் ஸப்வத் ஹிஜாசி அவர்களையும் நோக்கி சுதந்திர இக்வான்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இக்வான்களில் இருந்து பிரிந்த “தவஹ்ஹுத்” என்ற இயக்கம் கூறியதாவது:
தமது இயக்கம் எகிப்தின் மக்கள் பிரிந்துகிடப்பதைவிட்டும் தடுக்கவும் வன்முறையற்ற எகிப்தை உருவாக்க பொதுமக்களிடம் கையொப்பம் இடும் திட்டத்தில் இறங்க உள்ளதாகவும் அவ்வியக்கம் கூறியுள்ளது.
இக்வான்களின் இந்த பிரிவுகள் பற்றி “அஹ்ராம்” தேசிய பத்திரிகையின் ராஜதந்திர நிலைய பொறுப்பாளர் அம்ர் ஹாஷிம் ரபிவு என்வர் குறிப்பிடும்போது:
இக்வான்களில் ஏற்பட்ட இந்த பிளவானது இக்வான்களின் தவறுகளை அவர்கள் திருத்திகொள்ள மிகவும் வாய்ப்பாக அமையும்.இக்வான்களில் இருந்து பிரிந்த “வன்முறை அற்ற இக்வான்கள்” இயக்கத்தின் மக்கள் அதரவு எவ்வளவு என்பதை கணக்கிட முடியவில்லை.ஆனால் மூன்று லட்சம் உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் உள்ளதாக அந்த இயக்கம் கூறிவருவதாகவும் “அஹ்ராம்” தேசிய பத்திரிகையின் ராஜதந்திர நிலைய பொறுப்பாளர் அம்ர் ஹாஷிம் ரபிவு என்வர் கூறியுள்ளார்.
இக்வான்களில் இருந்து பிரிந்த பழைய கட்சிகள் விபரம்:
அல் வசத் கட்சி
அன்னஹ்லா கட்சி
மஸ்ருள் கவிய்யா கட்சி
இக்வான்களில் இருந்து பிரிந்த புதிய இயக்கங்கள் விபரம்
சுதந்திர இக்வான்கள்
வன்முறை அற்ற இக்வான்கள்
தவஹ்ஹுத் இயக்கம்
இவர்கள் யாவரும் இக்வான்களின் தலைமை மாறவேண்டும் என்ற கோரிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: அஹ்மத் ஜம்ஷாத்(எகிப்து)
اليوم السابع | الانشقاقات تضرب "الجماعة".. شباب الإخوان يتمردون على "بديع".. ويؤكدون: بقاؤه على...
كشفت مصادر مضطلعة أن جماعة الإخوان المسلمين، تعانى فى الوقت الحالى من عدد من الانشقاقات، وذلك بعدما تعالت فى الفترة السابقة، أصوات الشباب داخل الجماعة الذين تمردوا داخلياً على سياسية الإخوان ومكتب إرشادها ومرشدها العام محمد بديع، مطالبين بعودة الجماعة لدورها الإصلاحى والدعوى، كما

Post a Comment