நுகேகொடையில் கந்தவத்த வீதியில் விபசார நிலையமொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் இவ்விபசார நிலையத்தின் முகாமையாளர் உட்பட 7 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆயுர்வேத வைத்திய நிலையமாக இயங்கிவந்ததாகக் கூறப்படும் விபசார நிலையமே நேற்று சனிக்கிழமை இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 – 49 வயதுடைய பெண்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மஹரகம, பிட்டகோட்டே, தொடங்ஹாயாய, ஹோமாகம, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இச்சந்தேக நபர்களை நுகேகொடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணையை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment