தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சூழவுள்ள 22 குடும்பங்களை 7 நட்களுக்குள் வெளியேற உத்தரவு


Revolving-news-Flashதம்புள்ளை பள்ளிவாசலையைச் சூழவுள்ள 22 குடும்பங்களையும் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று வெள்ளிக்கிழமை (19.07.2013) கடிதம் அனுப்பியுள்ளதாக கிராமவாசி ஒருவர் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 60 பேர்ச் காணி மற்றும் வீட்டைக் கொண்ட வை.எம். சலீம் என்பவருக்கு 9750 ரூபா நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு வருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு 7 நாட்களுக்குள் வெளியேறாதபோது அப்பிரதேசத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தம்புள்ளைப் பள்ளிவாயல் குறித்து கேட்டபோது, பள்ளிவாசலுக்கு எவ்விதக் கடிதமும் இதுவரை வரவில்லை. ஏனெனில், அவர்கள் இதனை ஒரு பள்ளிவாயலாக ஏற்றுக் கொள்ளவில்லையாம் எனவும் தெரிவித்தார்.

ஆனால், இப்பள்ளிவாசல் 1960 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருவதாகவும், 1990 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசலுக்கான மின்சார கட்டணப் பட்டியல் வருவதோடு, 2002 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசல் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் பதியப்பட்டு இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, உரியவர்கள் இது குறித்து உடனடியாக கவனமெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Share this article :

+ comments + 1 comments

Anonymous
July 23, 2013 at 11:07 AM

யார் உரியவர்கள் இது சம்பந்தமாக கவனிக்க எமது கண்ணில்லாத கபோதிகளுக்கு நேரமில்லை. ஏன் இலக்‌ஷன் வேலையைவிடவா பள்ளிவாசல் அது இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன?

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger