|
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள அமோனியா கசிவு குறித்து இன்று அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வல்லுனர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாக, ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பிரிவின் விமான இயக்குநர், விளாடிமிர் சோலோவ்யு கூறுகையில், விண்வெளி நிலையத்தில் அமோனியா கசிவு ஏற்பட்டிருப்பது முக்கியமான பிரச்சினை.சர்வதேச விண்வெளி நிலைய உறுப்பினர்களை, விண்வெளியில் சென்று இந்தக் கசிவை சரிசெய்ய அனுப்புவதற்கு அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
|
நாசாவின் விண்வெளி வீரர்களான, டாம் மாஷ்பர்ன், கிரிஸ் காசிடி ஆகிய இருவரும், நாளை விண்வெளிக்கு சென்று இந்தக் கசிவை அடைக்க முயற்சி செய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் வெள்ளை நிறத்துகள்கள், விண்வெளியில் மிதப்பதை வீரர்கள் உறுதி செய்துள்ளனர் என்று கூறிய நாசா தகவல் மையம், இதுபோல் நடப்பது முதல்முறை அல்ல என்றும் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்த முறையான அறிவிப்பு ஏதும் ரஷ்ய விண்வெளி நிறுவனத்திடம் இருந்து வரவில்லை.
|
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமோனியா வாயுக்கசிவு!
Labels:
அறிவியல்

Post a Comment