வடமாகாண சபைத் தேர்தலில் அரசு சார்பில் சுயேட்சைக் குழுவொன்று களமிறங்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது:
|
வடக்கிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் தாம் அரசின் சார்பில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகளை அணுகியுள்ளனர். வடக்கு மக்கள் தமிழ் தேசியக் கட்சி மீதும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி. கட்சி மீதும் வெறுப்புணர்வில் உள்ளனர்.
எனவே சுயேட்சையாகக் களமிறங்கினால் மக்களின் ஆதரவைப் பெறமுடியுமென அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி சார்பில் முதல மைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
சுயேட்சைக் குழு ஒன்றினை வட மாகாணசபைத் தேர்தலில் களமிறக்குகின்றது அரசு!
Labels:
அரசியல் தலைவர்கள்
Post a Comment