படிக்க கட்டாயப்படுத்திய தந்தையையும், சகோதரியையும் ஆள் வைத்து கொன்ற சிறுவன் / குதிரையின் உயிரை காப்பாற்றிய பெண் -உண்மை சம்பவம்!



 

படிக்க கட்டாயப்படுத்திய தந்தையையும், சகோதரியையும் ஆள் வைத்து கொன்ற சிறுவன்
சீனாவில் படிக்க கட்டாயப்படுத்திய தந்தை மற்றும் சகோதரியை ஆள் வைத்து சிறுவன் ஒருவன் அடித்து கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தன்னை படிக்க கட்டாயப்படுத்திய அவனது தந்தை காவ் டியன்பெங் மற்றும் அவனது 20 வயது சகோதரியை ஆள் வைத்து அடித்து கொலை செய்துள்ளான்.
இணையம் மூலமாக தந்தை, அக்காவை தீர்த்துக் கட்ட ஆட்களை விலை பேசிய அச்சிறுவன் அவர்களுக்கு கொலை செய்ய சரியான திட்டம் தீட்டிக் கொடுத்திருக்கிறான்.
இது குறித்து பொலிஸார் விசாரித்ததில் கண்காணிப்பு கெமராவில் இருவர் அந்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைவது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் அச்சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்வியை பொறுத்தவரை சீனாவில் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு அதிகமான அழுத்தத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
001kindness-girlகுதிரையின் உயிரை காப்பாற்றிய பெண் -உண்மை சம்பவம்!
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்த பெண் குதிரையின் மீது சவாரி செய்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராதவிதமாக இருவரும் சேற்றில் சிக்கி கொண்டனர்.
மீட்பு பணியாளர்கள் வரும் வரை குதிரையின் தலை சேற்றில் மூழ்காதவாறு தன் குதிரையின் கழுத்தை மூன்று மணி நேரம் தூக்கி பிடித்தபடியே இருந்தாரம் இந்த பெண்.
தானும் ஆபத்தில் சிக்கி இருந்தாலும் தன உயிருக்கு ஈடாக தன குதிரையின் உயிரையும் எண்ணி காப்பாற்றிய இப் பெண்ணை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் தானே..!
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger