மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டதை எதிர்த்தும், மின்கட்டண அதிகரிப்பிற்கு ஆதரவாகவும் கொழும்பில் இன்று புதன்கிழமை ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
மின்கட்டணங்கள் அதிகரிப்பிற்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிராக நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் இயக்கம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பொரளையில் பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறும்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பை ஆதரித்து அரசாங்கத்திற்கு ஆதரவாக லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படுவதுடன் உலக வர்த்தக கட்டிடம் வரை எதிர்ப்பு ஊர்வலமும் நடத்தப்படும்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேர்மைக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அந்த இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சுபசிங்க தெரிவித்தார்.

Post a Comment