வங்கதேசத்தில் இஸ்லாமியவாதிகள் மீண்டும் போராட்டம்


இஸ்லாமிய பெறுமானங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரி வங்கதேச தலைநகர் டாக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியவாதிகள் ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.
ஹபசெட் ஈ இஸ்லாம் என்னும் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இஸ்லாத்தை அவமதித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையான இஸ்லாமிய கல்வியையும் வலியுறுத்துகிறார்கள்.
முன்னதாக போராட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர்ப் புகையையும் ரப்பர் தோட்டக்களையும் பொலிஸார் பிரயோகித்தனர். அதில் ஒருவர் மரணமானார்.
இந்தக் குழு கடந்த மாதமும் இதேபோன்ற போராட்டத்தை நடத்தியிருந்தது.
மதசார்பற்ற ஜனநாயக அரசாக விபரிக்கப்படும் அரசாங்கம் அவர்களது கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger