யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டள்ளனர்.
இவ் இரு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டன.
யாழ். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியில் தூக்கிலிட்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் மதிவாணன் தர்சினி (வயது 27) என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவேளை தெல்லிப்பழைப் பகுதியில் மற்றுமொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விஜியராசா சோபிதா (வயது 33) என்ற பெண் என தெரிய வந்துள்ளது.
மகாவலி கங்கை நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்பு-
அரலகன்வில, கந்தகதுவ பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அரலகன்வில, கந்தகதுவ பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பூஜாப்பிட்டிய மற்றும் வெரெல்லகம பகுதிகளிலிருந்து யாத்திரை வந்தவர்களில் 12 மற்றும் 18 வயதுடைய இருவரே மகாவலி கங்கையில் நேற்று சனிக்கிழமை நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
மற்றையவரின் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment