கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று விபத்துக்குள்ளான படகிலிருந்து காணாமற் போன கடற்படை உறுப்பினரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக படகொன்று நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியிருந்தது.
விபத்துக்குள்ளான படகு நேற்று மாலை கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கொமண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
படகு விபத்துக்குள்ளான போது அதில் நான்கு பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டமையே விபத்துக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு கடற்படை வீரர்களும் நேற்று மாலை சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான படகில் பயணித்த நால்வரில் ஒருவர் அருகிலிருந்த படகொன்றின் உதவியுடன் மீட்கப்பட்டார்.
15 வயது சிறுமி கொலை: கொலையாளி தப்பியோட்டம்
பொலன்நறுவை, மகசென்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு 15 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலன்நறுவை, மகசென்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு 15 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (18) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இக் கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அதேவேளை சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவரது சடலம் பொலன்நறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(இணைப்பு-2 VIDEO) வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் மூழ்கிய படகு! கடற்படையின் சடலம் மீட்பு..

Post a Comment