யுத்தத்திற்கு பின்னர் பெண்கள் மீதான வன்செயல்கள் அதிகரிப்பு!



நெடுங்கேணி சிறுமி மீதான பாலியல் பலாத்காரம், வவுனியா தாண்டிக்குளத்தில் சமூக ஆதரவற்ற நிலையில் தாயொருவர் தனது பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்ததையடுத்து மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஆகியவற்றைக் கண்டித்து பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு குரல் கொடுத்திருக்கின்றது. 

இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. 

இலங்கையில் போருக்குப் பின்னரான சூழலில் சமூகத்தில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள். 

இதனால், வளங்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புக்களை அவர்கள் சமமாகப் பெற முடியாமலிருக்கின்றது. 

அத்துடன், சமாதானத்தின் பெறுபேற்றைப் பெண்கள் அனுபவிக்க முடியாமலுள்ளது. வன்செயல்களுக்கும் அவர்கள் ஆளாகி வருகின்றார்கள்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

"யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் எந்தத்திட்டமும் பெரிய அளவில் பெண்களுக்குப் பயனளிக்கவில்லை. 

தற்காலத்தில் ஆண்களால் கைவிடப்படுகின்ற குடும்பங்களது பொருளாதார நிலையும் பாதுகாப்பு நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வவுனியா நெடுங்கேணி மற்றும் தாண்டிக்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகியிருக்கின்றன. 

இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால் பெண்கள் சமூகத்தில் சகல நிலைகளிலும் சமமாக மதிக்கப்பட வேண்டும். நடத்தப்பட வேண்டும். 

அவர்களது பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்." என்று பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger