பாரத லக்ஷ்மன் உறவினர்கள் சந்திரிகாவுடன் இணைந்து அரசியல்-
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் உறவினர்கள் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, முல்லேரியாவில் வைத்து கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் உறவினர்கள் எதிர்காலத்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுடன் இணைந்து செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேமச்சந்திரவுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகளவான ஆதரவு வழங்கிய போதிலும் அரசாங்கத்தினால் தமக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் குருணாகலில் நடைபெற்ற இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் ரஞ்சித் நவரத்னவின் இறுதிச் சடங்கின் போதே உறவினர்கள் இதனை கூறியுள்ளனர்.
அவர்களுடன் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இலஞ்ச ஊழல் விசாரணையில் எனக்கு நியாயம் கிடைக்காது -ஷிராணி கவலை-
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் பக்கச் சர்பானவர்கள் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி ஆணைக்குழுவின் தலைவர் பாலபட்டபெந்தி மற்றும் உறுப்பினர் ஜயந்த விக்ரமரட்ன ஆகியோர் பக்கச் சார்பானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டின் பின்னர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை. கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டிய அவசியமில்லை. குறித்த இருவரும் விசாரணைகளை நடாத்தினால் பக்கசார்பற்ற முறையில் விசாரணைகள் நடைபெறாது.
முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவிற்கும், நீதவான் பாலபட்டபந்திக்கும் காணப்படும் உறவுமுறை காரணமாக, நீதவான் பாலபட்டபந்தி தமக்கு எதிராக செயற்படக் கூடுமென அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
நீதவான் பாலபட்டபந்தியும், முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவும் உறவு முறையில் சம்மந்திகள். எனவே இந்த விசாரணைகளில் தனக்கு நியாயம் கிட்டக்கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது என ஷிரானி பண்டாரநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
களவாக மின்சாரம் பெற்ற பிரதேச சபை உறுப்பினர் கைது-
மின்மானியை மாற்றி மோசடியான முறையில் மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கப்பில குமார நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மின்மானியை மாற்றி மோசடியான முறையில் மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கப்பில குமார நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய பதில் நீதவான் விஜயபால மஹகொடகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்களுடன் இணைந்து எல்பிட்டி விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று குறித்த நபரை கைது செய்திருந்தனர். சந்தேகநபர் கரந்தெனிய பிரேதச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment