மகாசன் புயல் தாக்கம் இலங்கையிலும் ஏற்படும் சாத்தியக்கூறு-
திருகோணமலையிலிருந்து 650 கி.மீ தொலைவில் தென்கிழக்கு வங்களா விரிகுடாவில் மையம் கொண்டுள்ள மகாசன் புயலின் தாக்கம் இலங்கையிலும் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி வசந்த குமார் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து 650 கி.மீ தொலைவில் தென்கிழக்கு வங்களா விரிகுடாவில் மையம் கொண்டுள்ள மகாசன் புயலின் தாக்கம் இலங்கையிலும் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி வசந்த குமார் தெரிவித்துள்ளார்.
இப்புயல் தொடர்பில் வசந்த குமார் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு ஊடான ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 70 கி.மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசலாம். அத்தோடு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடற் பகுதிகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு கரையோரங்களில் அவதானமாக இருக்க வேண்டும். இலங்கையில் தென்மேற்கு திசையில் கடும் காற்று வீசும்.
அதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் இருளுடன் மேக மூட்டங்கள் காணப்படும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 200 மி.லீ. வரையிலான கடும் மழை வீழ்ச்சி பதிவாகும். அத்தோடு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.லீ. வரையிலான மழைவீழச்சி பதிவாகலாம்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடத்தல்தீவு: சுழல் காற்றில் கூரைகள் அள்ளுண்டு சென்றன-
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விடத்தல்தீவு கிராமத்தில் இன்று திங்கட்கிழமை காலை சுமார் 3 நிமிடங்கள் வரை வீசிய சுழல் காற்று காரணமாக 10 வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு போயுள்ளன.

மேலும், இக்கிராமத்திலுள்ள மின்கம்பங்களும் உடைந்து வீழ்ந்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கடும் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது.
தென்பகுதியைச் சேர்ந்த படகுகள் கிழக்கில் கரையொதுங்கின-
தெற்கிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற படகுகள் கிழக்கில் கரையொதுங்கியுள்ளன.
தெற்கிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற படகுகள் கிழக்கில் கரையொதுங்கியுள்ளன.
காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களிலிருந்து கடலுக்கு சென்ற 25-30 படகுகளே இவ்வாறு அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளன என்று அட்டாளைச்சேனை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றுக்காலை வீசிய மினி சூறாவளியினால் படகுகள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்த மீனவர்கள் இந்த சம்பவத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
098.jpg)
Post a Comment