மெய்க்டீலா மதக் கலவரங்களில் பலர் கொல்லப்பட்டனர்
பர்மாவில் இந்த ஆண்டு முன்னதாக நடந்த மதக்கலவரங்கள் தொடர்பாக ஏழு முஸ்லிம்களுக்கு பர்மீய நீதிமன்றம் ஒன்று இரண்டாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது.
மத்தியப் பகுதி நகரான மெய்க்டிலாவில் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டுவந்த தங்க நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட சச்சரவை ஒட்டி நிகழ்ந்த வன்முறையில், புத்த பிக்கு ஒருவரைக் கொன்ற குற்றத்துக்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் மிகவும் மோசமான வன்முறைகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக பௌத்தர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
பௌத்தக் கும்பல்கள் மத்திய பர்மாவில் முஸ்லிம்களின் வீடுகளையும் வழிப்பாட்டிடங்களையும் தாக்கியபோது நாற்பதுக்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்களில் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் அவரவர் வீடுகளை விட்டு விரட்டப்பட்டனர்.

Post a Comment