இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 4 சிறுநீரகங்களுடன் வாழுகின்ற வழமைக்கு மாறான விடயமொன்று வைத்திய சோதனைகளின்போது தெரியவந்துள்ளது.
20 வயதான ஜெஸிகா என்ற பெண்ணே இவ்வாறு 4 சிறுநீரகங்களுடன் வாழுகின்றார். இப்பெண்ணின் வயிற்றின் வலது புறத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்திய சோதனைக்குட்படுத்தப்படுகையில் வலதுபுற சிறுநீரகத்தில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் மீண்டும் 11 நாட்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய சோதனையின் போது வலது புறத்தில் 2 சிறுநீரகங்கள் இருப்பதனையும் அவற்றிலும் கட்டி வளர்ந்திருப்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
பின்னர் கட்டிகளை அகற்ற சத்திரசிகிச்சைகள் மேற்கொண்ட போது குறித்த பெண்ணில் மேலும் இரு சிறுநீரகங்கள் இருப்பது தெரிந்து வைத்தியர்கள் ஆச்சரியமடைந்துள்ளர்.
இவ்வாறு ஒருவருக்கு 4 சிறுநீரகங்கள் அமைந்திருப்பது மிக மிக அரிதானதொன்று என்பதும் ஆச்சரியமானதும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய விஞ்ஞானிகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை பூமி திரும்பியது-
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை போன்றவை நேற்று பூமி திரும்பியது.
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை போன்றவை நேற்று பூமி திரும்பியது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதுவான சூழல் இருப்பதாக விஞ்ஞானிகளிடத்தில் நம்பிக்கைகள் அதிகரித்துவருகின்றது. இதனால் செவ்வாய் கிரகத்தின் மீதான ஆராய்ச்சிகளும் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியான ரஷ்யாவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ரஷ்ய விஞ்ஞானிகள் எலி, பல்லி மற்றும் உள்ளிட்ட உயிரனங்களை ‘பயோன்-எம்’ என்ற விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்பினர்.
இதன் மூலம் புவி ஈர்ப்பு இல்லாத விண்வெளியில் உயிரினங்களின் இதயம், நரம்பு, தசை போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய ரஷ்ய விஞ்ஞானிகள் முற்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் விண்வெளிக்கும் அனுப்பட்ட 45 எலிகள் மற்றும் 15 பல்லிகள் உள்ளிட்ட மேலும் சில உயிரினங்கள் நேற்று தரையிறக்கப்பட்டது. இதேவேளை திரும்பு வந்த உயிரினங்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றில் எத்தனை உயிருடன் உள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் எதனையும் விஞ்ஞானிகள் வெளியிடவில்லை.
Post a Comment