மின்கட்டண எதிர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் அரசு அச்சமடைந்துள்ளது – ஐ.தே.க



இன்று நடைபெறவுள்ள மின்கட்டண உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் அரசு அச்சமடைந்துள்ளதோடு போராட்டத்தில் இருந்து தொழிலாளர்களை பின்வாங்க வைக்க பல்வேறுபட்ட வழிமுறைகளையும் கையாள்வதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்க; இந்த வேலை நிறுத்த போராட்டம் அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டாம் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பிள்ளைகள் அனைவரும் பௌத்த மத நிகழ்வுகளில் கலந்து கொள்ள பாடசாலை வரவேண்டும் என கேட்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக மே 15 இல் நடைபெற்ற மின்கட்டண உயர்வு எதிர்ப்பு பேரணியை அரசு நிறுத்த முயன்ற போதும் அது தோல்வியில் முடிவடைந்ததாக கூறினார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger