அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் ஆண் மாணவன் ஒருவரை வற்புறுத்தி வகுப்பறையில் பாலியல் வல்லுறவுகொண்டார் என்ற சந்தேகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூ மெக்ஸிகோவிலுள்ள உயர் பாடசாலை ஒன்றில் 8 வருடங்களாக கற்பிக்கும் ஜெனிபர் விஜில் என்ற 31 வயதான ஆசிரியையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பொலிஸாரில் முறைப்பாடு செய்ததனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளன. இரண்டு முறை குறித்த மாணவனை அவர் பாடசாலையில் வைத்து வல்லுறக்குட்படுத்தியுள்ளார். ஒரு முறை பாடசாலை முடிந்த பின்னரும் மற்றுமொரு முறை காலையில் பாடம் முடிந்து மாணவர்கள் வெளியான பின்னர் கதவுகளை அடைத்துவிட்டும் அம்மாணவனுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். வகுப்பறையில் நடந்த இச்சம்பவத்தை மாணவன் ஒருவர் அவரது கைத்தொலைபேசியில் படம்பிடித்துள்ளார்.
மாணவன் வயதுக்கு வந்தவர் என்றும் அம்மாணவனின் சம்மதத்துடனேயே தான் உடலுறவுகொண்டதாகவும் ஆசிரியை ஜெனிபர் விஜில் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவன் இது குறித்து கூறுகையில், வகுப்பறைக் கதவுகளை அடைத்து என்னை வற்றுபுறுத்தியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றது எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஆசிரியை விஜில் பிணை இன்றி சிறையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் நால்வர் பலி-
பாகிஸ்தானில் எதிர்வரும் 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை சீர்குலைக்க தலிபான் தீவிரவாதிகள் சதி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே குண்டுகளை வெடிக்க செய்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கராச்சியில் முத்தாகிதா குவாமி இயக்கம் கட்சி தலைமை அலுவலகம் ஆசீஷ் அபாத் பகுதியில் உள்ளது. அங்கு தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், நேற்று அங்கு சக்தி வாய்ந்த 2 குண்டுகள் வெடித்தன. அவை சில நிமிட இடை வெளியில் அடுத்தடுத்து வெடிக்க செய்யப்பட்டன.
இச்சம் பவத்தில் கட்சி தொண்டர்கள் 4 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாகிதா குவாமி இயக்கம் கட்சி மற்றும் ஏ.என்.பி. கட்சி அலுவலகங்கள் மீது தங்கள் தாக்குதல் தொடரும் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம்-
அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் நாளை முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தொடர்பாடல் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் நாளை முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தொடர்பாடல் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் ஏப்ரல் 8ம் திகதி தொடக்கம் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்பின் மேலதிக சேவைகளில் இருந்தும் விலகினர்.
எனினும் தமது கோரிக்கைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாதததால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Post a Comment