கையடக்கத் தொலைபேசியில் பாலியல் காட்சிகள் / பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானது, 12பேர் காயம் / மீகொடையில் 650,000 கொள்ளை, பொறுப்பதிகாரி பணி நீக்கம்


கையடக்கத் தொலைபேசியில் பாலியல் காட்சிகள்-
பாலியல் உணர்வுகளை தூண்டும் காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த மூவருக்கு தலா 800 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம், மஹர நீதவான் நீதிமன்ற நீதிவான் செல்வி தர்ஷிகா விமலசிரி இத்தீர்ப்பை வழங்கியதுடன் கையடக்கத் தொலைபேசிகளை பறிமுதல் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
பியகம பொலிஸார் இந்த மூன்று நபர்களுக்கும் எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானது, 12பேர் காயம்-
இரத்தினபுரி எலபாத்த வீதியின் கெட்டமான்ன பகுதியில் இன்றுகாலை 6.40அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எலபாத்த பகுதியில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்த 12 பேரில் 9 பெண்களும் 2 சிறுவர்களும் அடங்குவர். பஸ்ஸின் சாரதி பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகொடையில் 650,000 கொள்ளை, பொறுப்பதிகாரி பணி நீக்கம்-
கொழும்பு, மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்த இரு வர்த்தக நிலையங்களில் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவைக் கொள்ளையிட்டு தப்பிச்சென்ற இரு சந்தேகநபர்கள் மிரிஹான குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேகநபர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஐவர் அண்மையில் மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையிட்டிருந்தனர்.
இச்சம்பவம் காரணமாக மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் காவலரணில் இருக்கவில்லை என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger