ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வாபஸ் ஆனது. அதன்பின்னர் முதல் தடவையாக மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 450 இடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 15 வேட்பாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் செத்தனர்.
இருந்த போதிலும் திட்டமிட்டபடி மாகாண சபை தேர்தலில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் ஆர்வமாக சென்று ஓட்டுப்போட்டார்கள். அமெரிக்க படை வாபஸ் ஆன பிறகு இப்போது தான் அங்கு முதல்கட்டமாக தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.
Post a Comment