தயா மாஸ்டர் ஓர் பயங்கரவாதத் தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் அரசாங்கம் தம் பக்கம் இணைத்துக் கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்காது, அரசாங்கம் அவர்களை பாதுகாத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் புலிகளின் தலைவர்களான பிள்ளையான், கருணா ஆகியோருக்கு அரசியல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும், தற்போது தயா மாஸ்டருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் சில காலங்களில் குமரன் பத்மநாதனுக்கும் அரசியலில் களமிறங்க அரசாங்கம் வழியமைக்கும் அல்லது தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும்எ ன அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பின் நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களக்கு எதிராக கருத்து வெளியிடுவோரின் பட்டியலை திரட்டி வரும் அரசாங்கம், ஆதரவாக செயற்படுவோரை போஷித்து பாதுகாத்து வருவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Post a Comment