மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்க்கட்சியினர் நடத்திய மெழுகுவர்த்திப் போராட்டத்தின் மீது ஆளும் கட்சியினர் தண்ணீர்ப் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பாராளுமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
இதன்போது சபையில் பதற்ற நிலை நிலவியதுடன் அவ்விடம் கலவர பூமியாக காட்சியளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதுடன், அவர்கள் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
உறுப்பினர்கள் சிலர் மேசையின் மீது ஏறி நின்று கூச்சலிட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் சபையில் 4 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், மே மாதம் 7 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment