இலங்கையின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறவுள்ளார்.
இந்த தகவலை அவருடைய சகோதரரால் நடத்தப்படும் தனியார் வானொலி வெளியிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு கொலன்னாவையில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திரவின் கொலையில் சந்தேக நபராக துமி;;;ந்த சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த சம்பவத்தின் போது காயமடைந்த அவர் சிங்கப்பூரில் சிகிச்சைப்பெற்ற பின்னர் அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் பாரத லச்மனின் கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த துமிந்தவின் மெய்பாதுகாவலர்கள் நால்வர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையிலேயே துமிந்த சில்வாவும் மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார்
Post a Comment