நாடர்ளுமன்றில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென உறுப்பினர்களுக்கு பாடகம் புகட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றிற்குள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சில புதிய நியதிகளை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகரிடம் இது குறித்து பேசப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தலைமையில் குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆராயவுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் புதிய நியதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
Post a Comment