|
துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
|
ஆப்கானில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலி தலிபான்களிடம் சிக்கியது!
Labels:
சர்வதேசம்
.jpg)
Post a Comment