இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் குறித்து பொய்யான தகவல்களை அளித்தது தெரிந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஹால்புரூக் செயல்பட்டதாக அண்மையில் வெளியான புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதராகப் பதவி வகித்தவர் ரிச்சர்டு ஹால்புரூக். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இவர் செயல்பட்டதாக நூல் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
|
புலிட்சர் விருதை இரண்டு முறை வென்ற எழுத்தாளர் டேவிட் ரோட் எழுதி அண்மையில் வெளியான பியாண்ட் வார் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தலிபான் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய ரிச்சர்டு ஹால்புரூக் இரு நாடுகளுக்கும் பல முறை சென்று வந்துள்ளார். அப்போது இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதை நன்கு அறிந்திருந்தார்.இந்தியா குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தன்னிடம் தவறான தகவல்களை அளிக்கிறார்கள் என்பதும் ஹால்புரூக்குக்குத் தெரியும். இருந்தும் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அந்த நாட்டுக்கு அமெரிக்காவிடமிருந்து அதிக நிதியைப் பெற்றுத் தருவதிலுமே கவனம் செலுத்தினார்.
தான் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது இது குறித்து ஹால்புரூக் தன்னிடம் கடந்த 2010-ஆம் ஆண்டு விவாதித்திருக்கிறார் என்று டேவிட் ரோட் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹால்புரூக்கின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையும், அவருடைய முரண்பட்ட செயல்பாடுகளையும் குறித்து அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் புகார் தெரிவித்ததையும் அந்தப் புத்தகக்த்தில் குறிப்பிட்டுள்ளார் டேவிட் ரோட்.
|
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்ட அமெரிக்க தூதுவர் - சர்ச்சையைக் கிளப்புகிறது புத்தகம்!
Labels:
சர்வதேசம்
Post a Comment