வட மாகாண தேர்தல் இரண்டாம் ஈழ திட்டத்திற்கு வழிவகுக்கும் - விமல் எதிர்ப்பு




வட மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகிவரும் நிலையில் தாம் அதற்கு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது இரண்டாம் ஈழ செயற்பாட்டை ஆரம்பிக்கும் திட்டமாக அமையும் என்று தான் கருதுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். 

பத்தரமுல்லை கட்சி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு மின்கட்டண உயர்வு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், 

இலங்கை மின்சார சபை நட்டத்தை ஈடுசெய்ய மின்கட்டண உயர்வு அரசாங்கத்திற்கு இலேசான பதிலாக இருக்கின்ற போதும் மக்களுக்கு அது கடினமானது என தெரிவித்துள்ளார். 

இந்த பிரச்சினைக்கு முன்கூட்டியே தீர்வுகாண வாய்ப்பிருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார். 

மொத்த பிரச்சினைகளுக்கு தீர்வினை காணாது ஒருநாள் பிழைப்பிற்கு தீர்வினை காண செயற்பட்டதால் மின் கட்டண பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மின்சார துறை முழுமையாக அரசு அதிகாரத்தின் கூழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படும் காலத்தில் அதிக கட்டணம் அறவிடப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

எரிபொருள் மாபியா செயற்படுத்தப்படுவதாகவும் அந்த மாபியாவும் மின்கட்டண பிரச்சினைக்கு காரணம் என விமல் கூறினார். 

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுடைய சொத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர்களது பிள்ளைகள் கல்வி கற்பது எங்கே ? எப்படி ? என அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger