கொமன்வெல்த் மாநாடு ஸ்ரீலங்காவில் இடம்பெறக் கூடாது என லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்!



இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என பிரித்தானிய தமிழர் பேரவையால் இன்று 11 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Commonwealth Secretariat, Marlborough House, PallMall, London SW1Y 5HX என்னும் முகவரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனடா இலங்கையில் கொமன்வெலத் மாநாட்டை நடத்த இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் பிரித்தானியா இன்னும் மெளனம் சாதித்து வருகிறது. இதனை கனடாவுடன் இணைந்து பிரித்தானியாவும் எதிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடு்க்குமுகமாக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை சனல் 4 உட்பட சில சர்வதேச தொலைக்காட்சிகள் நேரடியா வீடியோ எடுத்து தனது செய்திகளில் இணைக்கவும் உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். கொமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதா இல்லையா என்ற வராலாற்று சிறப்பு மிக்க கூட்டம் ஒன்று நாளை லண்டனில் நடைபெற்றது. இந்நேரத்தில் இலங்கையில் இம் மாநாட்டை நடத்தக்கூடாது என சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையால்(BTF) இந்த ஆர்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
   
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger