|
|
மக்கள் மீது சுமைகளை திணிப்பது பொருளாதார வளர்ச்சியாகாது என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காபட் செய்த பாதைகளை கடக்கும் போது எமக்கு சிரிப்பு வருகிறது. ஏனெனில், இந்த பாதையின் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 50 மில்லியன் ரூபா தரகுப் பணத்தை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொள்கின்றனர். நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கு 7000 கோடி ரூபா ஒதுக்கப்படும் அதேவேளை, நாட்டை ஆட்சி செய்பவரின் செலவுக்காக 700 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
|
இவ்வாறான ஓர் நிலைமையில் எவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்? உங்களை பார்க்கும் போது நீங்கள் அணிந்துள்ள ஆடைகளை பார்க்கும் போது நாட்டின் பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்ள முடியும். கப்பல்கள் செல்லாத துறைமுகம் அமைக்கப்பட்டது, விமானம் செல்லாத விமான நிலையம் அமைக்கப்பட்டது. கட்டுநாயக்கவிலிருந்து பறக்கும் ஸ்ரீலங்கன் விமானம், மத்தளவில் இறக்கப்பட்டு எரிபொருள் ஏற்றப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். நாரம்மல நெலல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
|
கப்பல் செல்லாத துறைமுகம், விமானம் செல்லாத விமான நிலையம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளது - சரத்
Labels:
அரசியல் தலைவர்கள்

Post a Comment