நாட்டில் அண்மைக் காலத்தில் நடந்துள்ள நீதிபதிகளின் பணி இடமாற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது.
மூத்த சட்டத்தரணிகள் ஐந்து பேர் கொண்டதாக இந்தக் குழு அமையும். தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறுபதுக்கும் அதிகமான நீதிபதிகள் இடமாற்றப்பட்டுள்ளனர் என்றும், விதிகள் கடைப்பிடிக்கப்படாமல் நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் உபுல் ஜயசூர்ய கூறியுள்ளார்.
பழிவாங்கல் நடவடிக்கையாக நீதிபதிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ள நிலையில், அது பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஜயசூர்ய கூறினார்.
விசாரணைகளை நடத்தி முடித்த பின்னர், இந்த இடமாற்றங்களின் நியாயங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தலைமை நீதிபதியிடம் கேள்வி எழுப்பும் என்று உபுல் ஜயசூர்ய கூறினார்.

Post a Comment