சிலாபம் பொலிஸ் பிரிவில் கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் தெதுருஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் பிரதேச சபைத் தலைவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (25) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து புத்தளம் சென்ற லொறி குறித்த திசையில் பயணித்த புத்தளம் பிரதேச சபை தலைவரின் கெப் வாகனம் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த கெப் வாகனத்தின் சாரதி மற்றும் புத்தளம் பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் புத்தளம் பிரதேச சபைத் தலைவர் ஆர்.பி.திலுக் பத்திரகே (40 வயது) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.
.
Post a Comment