ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப் படுவதாக அதிபர் மகமூத் அகமதி னேஜத் தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளுடன் அதற்கு இணையாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி இக்கருத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி தற்போது 7 கோடியே 50 லட்சம் ஆக உள்ள ஈரானின் மக்கள் தொகையை 15 கோடியாக உயர்த்த வேண்டும். அதற்காக ஈரானில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யும் படி உத்தரவிட்டார்.
|
ஈரானில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. அதற்காக சுகாதாரத்துறை அமைச்சகம் 1 கோடியே 50 லட்சம் அதிகாரிகளை பணி நியமனம் செய்துள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று இளம் தம்பதிகளை சந்திக்கின்றனர். அவர்களிடம் அதிக குழந்தை பெற்றுக் கொள்ளும் படி வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே ஒரு குழந்தையுடன் வாழும் தம்பதிகளை அடுத்த ஒரு வருடத்தில் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும்படி எடுத்துரைக்கின்றனர். கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரைகளை வழங்குகின்றனர்.
|
ஈரான் மக்கள் தொகையை உயர்த்த வேண்டும் - கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்: - ஈரான் அரசு அறிவிப்பு
Labels:
சமூக அவலம்
Post a Comment